சென்னையில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரத்தியேக சந்தை..!

Video Description

அனைத்து விதமான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ரிட்சி ஸ்ட்ரீட் தமிழகத்திற்கு தலைநகரமாக இருப்பது சென்னை மாநகரம் இங்கே கிடைக்காத பொருட்களே கிடையாது அப்படி இருக்கும் வகையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு பெயர் போன ஒரு இடம் ரிட்சி ஸ்ட்ரீட் இது மவுண்ட் ரோடில் இருக்கிறது சரியாக சொல்லவேண்டும் என்றால் கேசினோ திரையரங்கிற்கு அருகில் அமைந்திருக்கிறது இந்த தெரு முழுக்க ஏராளமான கடைகள் இருக்கின்றன சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன இந்த கடைகளில் அனைத்துவிதமான இயந்திர பொருட்கள் விற்கப்படுகிறது இங்கு நமக்குத் தேவையான டிவி, ஒலிப்பெருக்கி கருவி, மொபைல் போன், மொபைலுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், ஏதாவது புதுவிதமான இயந்திர பொருட்கள், மடிக்கணினி மற்றும் கணினி போன்ற அனைத்தும் இங்கு மலிவான விலையில் கிடைக்கின்றன இங்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பழைய பொருட்கள் அல்லது புது பொருட்களை கூட வாங்கி செல்லலாம் ஏதாவது ஒரு புதுவிதமான இயந்திர பொருளை தயாரிக்கும் எண்ணம் இருப்பவர்கள் இங்கு கிடைக்கும் குப்பை பொருட்களை கூட வாங்கி செல்கிறார் இதன்மூலம் புதுவிதமான ஒரு கருவியை உண்டாக்கி சாதனைகளும் படைக்கிறார்கள் இப்படி ஆர்வமாக இருப்பவர்கள் இங்க வந்து உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி செல்லலாம் இதுமட்டுமில்லாமல் இங்கு புதுவிதமான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ப்ளே ஸ்டேஷன் வீடியோ கேம் போன்றவைகள் கிடைக்கின்றன இதற்கு தேவையான சிடிகளும் இங்கே கிடைக்கின்றன எனவே உங்களுக்கு சிறியது முதல் பெரியது வரை எந்த ஒரு இயந்திர பொருள் தேவை என்றாலும் இங்கு வந்தால் நிச்சயம் மலிவான விலையில் வாங்கி செல்லலாம் இதை தவிர்த்து இவர்கள் புதுவிதமான பொருட்களை தயாரித்து விற்கிறார்கள் அதுவும் சாதாரண விலைக்கு. மவுண்ட் ரோடு / ரிச்சி ஸ்ட்ரீட் / திரையரங்கு / இயந்திரம் / பொருட்கள் / மலிவு / விலை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.