அணைத்து வகையான உணவுகளும் கிடைக்கும் கோயம்புத்தூர் புட் ஸ்ட்ரீட்.!

Video Description

அனைத்து வகையான உணவுகளும் கோயம்புத்தூரில் கிடைக்கும் கோயம்புத்தூர் சரவணம்பட்டி அமைந்துள்ள ஃபுட் ஸ்ட்ரீட் பிஸ்டா. கோயம்புத்தூரில் முதல் ஸ்ட்ரீட் உணவகம் இதுதான் இங்கு மொத்தம் 53 உணவகங்கள் உள்ளன இதில் எக்கச்சக்கமான, ஏராளமான வகையான உணவுகளும் கிடைக்கிறன. 40 ஆயிரம் சதுர அடியில் கடைகளும் 50 ஆயிரம் சதுர அடியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது. இங்கு விதவிதமான உணவுகள் கிடைக்கின்றன சீன உணவகம், இட்டாலியன், கான்டினென்டல், அரபியன், பர்மிஷ், நார்த் இந்தியன், தென்னிந்தியன், ஆந்திரா மற்றும் கேரள உணவுகள் இங்கே கிடைக்கின்றன. இங்கு இட்லி மற்றும் குடல் குழம்பு பலவகையான பிரியாணி மற்றும் தந்தூரி தேனீர்கள், வித விதமான தோசைகள் பீசா என்று எல்லா வகையான உணவுகளும் இங்கு தரமான முறையில் சமைத்து நியாயமான விலையில் தருகிறார்கள். இங்கு பெரிய தொலைக்காட்சியும் அமைத்து ஏதாவது கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் இதில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள். பொழுது போக்குடன் உணவருந்தும் தரமான இடம் கோயம்புத்தூரில் இருப்பது மகிழ்ச்சியே. கோயம்புத்தூர் சரவணம்பட்டி / உணவகம் / தரமான இடம் / பொழுது போக்குடன் உணவருந்தும் இடம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.