இந்தியாவின் மிக இளமையான நீதிபதி..!

Video Description

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த இளைஞன் 27 வயதில் இந்தியாவின் இளம் நீதிபதியாக இருக்கிறார். இந்த இளைஞனின் பெயர் மயங்க் பிரதாப் சிங். நீதிபதி களுக்கான தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் இவர் இளம் நீதிபதியாகி புதிய வரலாறு படைத்திருக்கிறார். ராஜஸ்தான் மாநில அரசு நடத்திய நீதித்துறை பணிக்கான தேர்வில் இவர் வெற்றி பெற்றுள்ளார் இதன் மூலம் இவர் இந்தியாவின் மிக இளம் வயதில் நீதிபதி என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார். நீதித்துறை பணிகளுக்கான வயது வரம்பு 23 ஆக இருந்தது எனினும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு வயது வரம்பு 21 ஆக குறைத்தது இதனால்தான் தான் தேர்வு எழுதி வெற்றி பெற முடிந்ததாக கூறும் மயங்க் இது ஒரு நல்ல வெற்றி என்றும் இதனால் தன்னால் மேலும் அதிகமானவர்களுக்கு உதவ முடியும் என்று கூறியுள்ளார். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தினமும் 12 முதல் 13 மணிநேரம் படித்ததாக அவர் கூறுகிறார். இப்போது கிடைத்துள்ள இந்த வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அதற்கு உறுதுணையாக இருந்த அவரது குடும்பத்தாருக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து நலம் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதோடு இளம் வயதிலேயே நீதிபதியாக ஆவதன் மூலம் நான் அதிக அளவில் கற்றுக் கொள்வதற்கும் அதிக காலம் பணியாற்றவும் அதிக சேவை புரியவும் கூடுதலான நேரம் எனக்கு கிடைக்கும் என்று கூறுகிறார்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.