வீட்டில் வாஸ்து தவறுகள் உடல்நலத்தைப் பாதிக்குமா?

Video Description

நமது முன்னோர்கள் நோயாளியின் மருத்துவ முறையில் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை எனில், நோயாளி குடியிருக்கும் இல்லத்தில் கெட்ட ஆத்மா, கெட்ட சக்திகள், பில்லி, சூனியம் இருப்பதாக சொல்லி வேறு இடத்திற்கு மாற்றம் செய்து வைத்தியம் பார்ப்பார்கள். அவ்வாறு வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யும் பொழுது அந்த இடத்தின் சூழல் அவருடைய நோயை கட்டுப்படுத்தும். அந்த வகையில் இக்காலத்தில் கூட ஒரு நோய் ஒருவர் உடலில் இருந்து விலகவில்லை என்று சொன்னால் உடனே இல்லத்தை மாற்றினால் நல்லது என்று கூறுகின்றனர். வீட்டிற்கு சூரிய ஒளி என்பது கிழக்கிலிருந்து பெரும் வகையில் அமைய வேண்டும். கதிரவனின் ஒளி இல்லையேல் வைட்டமின் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு உடலில் வளர்ச்சி என்பது மாறும். ஆகவே எக்காரணம் கொண்டும் கிழக்குத் திசையிலிருந்து வரும் சூரிய ஒளியை தடுக்கக் கூடாது. மேலும் குழந்தைகளுக்கு அதிகாலை சூரிய ஒளி உடல் வளர்ச்சியையும், எலும்புகள் வளர்ச்சி அடையவும், கண்பார்வை கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் காலம் காலமாக பிறந்த குழந்தைகளை காலை நேரத்தில் சூரிய ஒளியில் 10 நிமிடங்கள் காண்பிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. சூரிய ஒளி படும் நிலையில் வீட்டினை அமைத்து வாஸ்துப்படி இருந்தால் நாம் எந்த நோயும் அண்டாமல், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.