காமாட்சி விளக்கு எதற்க்காக

Video Description

காமாட்சி விளக்கு மட்டும் ஏன் அனைத்து வீடுகளிலும் ஏற்ற வேண்டும் தெரியுமா? தமிழகத்தில் உள்ள இந்துக்களின் வீட்டில் காமாட்சி விளக்கை பொதுவாக காணலாம். எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது இல்லத்திலும் உள்ளது .அனைத்து வீட்டு விசேஷங்களிலும் பயன்படுத்தப்படுகிறது .இதன் முக்கியத்துவம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். ஒரு சமயம் காமாட்சியம்மன் உலக மக்களின் நன்மைக்காக கடும் தவம் புரிந்தார் அப்போது சகல தெய்வங்களும் அவளுள் அடங்கியது. ஆகையால் ஒருவர் காமாட்சி அம்மனை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலனை பெறலாம். இன்றுபோல் பழங்காலத்தில் புகைப்படங்களைக் கொண்டு தெய்வத்தை வழிபட வில்லை .மாறாக விளக்கேற்றி தெய்வத்தை வழிபட்டனர். காமாட்சி அம்மனுக்கு சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் தங்களுடைய குல தெய்வங்களை நினைத்து கொண்டு காமாட்சி விளக்கை ஏற்ற ஆரம்பித்தனர் .இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளும் ஆசியும் கிடைத்தது .விளக்குகளிலேயே மிகவும் புனிதமாகக் கருதப்படும் காமாட்சி விளக்கை சிலர் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருகிறார்கள். திருமணத்தின் போதும் சடங்குகளின் போதும் காமாட்சி விளக்கு ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இதன் மூலம் தங்களுக்கு செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். காமாட்சி விளக்கை ஏற்றுவதால் குலம் தழைத்து வாழையடி வாழையாக வளரும் என்பது நம்பிக்கை. காமாட்சி விளக்கு தினம் தோறும் வீட்டில் ஏற்றி வழிபடுவதின் மூலம் வாழ்வில் சகல சந்தோஷங்களும் பெருகும். புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது நிறைநாழி எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் மீது தீபம் ஏற்றவேண்டும். சுமங்கலிப் பெண்கள் செவ்வாய் வெள்ளி காலையில் குளித்துவிட்டு காமாட்சி விளக்கு ஏற்றினால் அந்த வீடு சுபிட்சம் அடையும். அதனால்தான் பெண்களுக்கு சீர் வழங்கும்போது காமாட்சி விளக்கும் இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் கொடுக்கிறார்கள் நம்முடைய தமிழர் வாழ்வில் காமாட்சி விளக்கு ஒரு அங்கமாகவும் மங்கலப் பொருளாகவும் இன்றளவும் திகழ்கிறது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.