ஏன் சித்திரகுப்தன் எமனுக்கு உதவியாளார் ஆனார் தெரியுமா?

Video Description

எமதர்மன் . உலக மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கிட தனக்கொரு உதவியாளர் வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினான். சிவபெருமானும் ஒப்புக்கொண்டார். இந்த சமயத்தில் சூரியனுக்கும், நீலாதேவிக்கும் "சித்ரகுப்தன்' என்ற மகன் பிறந்தான். பிறக்கும் போதே இடக்கையில் ஓலைச்சுவடியும், வலக்கையில் எழுத்தாணியும் வைத்திருந்தான். தன் தந்தையின் விருப்பப்படி சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து எமதர்மனின் உதவியாளராகும் பதவியைப் பெற்றான். பார்வதி வரைந்த சித்திரம் ஒன்றிற்கு சிவன் உயிரூட்டியதாகவும், அவரே சித்திர குப்தர் என்றும் ஒரு வரலாறு உண்டு. இவர் நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிதேவதை சித்திரகுப்தன். இவரை வழிபட்டால் கேதுவின் அருள் பெற்று பிறவிப்பிணி நீங்கி நற்கதி அடையலாம். காஞ்சிபுரத்திலும், தேனி அருகிலுள்ள கோடாங்கிபட்டியிலும் சித்ரகுப்தருக்கு கோவில் உள்ளது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.