எந்த நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என உங்களுக்கு தெரியுமா

Video Description

நேர்மைன்னா சோப்பு சொல்ற இந்த கால உலகத்துல..எந்த நாட்டு மக்கள் அதிக நேர்மையா இருக்குஇறாங்க? இன்னும் மக்கள் நேர்மையானவர்களாக இருப்பாங்களான்னு டெஸ்ட் பண்ண ஸ்விஸ் ஆய்வுக் குழு முயற்சி செஞ்சாங்க. அதிக பணம் , கார்ட், சாவி உள்ள பர்ஸ் , பணம் இல்லாத பர்ஸ் இவற்றைஹோட்டல் , தியேட்டர் , வங்கி போன்ற இடங்களில் போட்டு விட்டு. மக்கள் அதை எடுத்து பத்திரமாக திருப்பித் தருகிறார்களா என்பதுதான் அந்த ஆய்வு. கிட்டத்தட்ட 40 நாடுகளில் 355 நகரங்களில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்தியாவில் மும்பை, டெல்லி, கோவை , கொல்கத்த, ஹதரபாத், ஜெய்ப்பூர் , பெங்களூரு ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டது. ஆச்சர்யகரமான விஷயம் என்னவென்றால் பணம் இல்லாத பர்சை திருப்பித் தருபவரை விட பணம் உள்ள பர்ஸை அப்படியே திருப்பித் தந்தவங்கதான் அதிகமாக இருந்தது. உலகெங்கும் இதே நிலை இருந்ததுதான் ஆச்சர்யமான விஷயம். மக்கள் தங்களை நேர்மையானவர்கள் என்பதை நிருபீக்க முயற்சிக்கிறார்கள் என்றாலும் நேர்மை அதிகம் இருந்ததை எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறாங்க. இந்த ஆய்வுல ..ஸ்விட்சர்லாந்து நேர்மையான நாடாக இருக்கிறது. இருக்கிதுலேயே சீனா தான் நேர்மை இல்லாத, மோசமாகவும் இருந்ததா சொல்றாங்க.இந்தியா எவ்வளவோ பரவாயில்லையாம். பணமில்லாத பர்சை திருப்பித் தருபவர் 20% ம், பணம் இருக்கும் பர்சை பத்திரமாக திருப்பித் தருபவர் எண்ணிக்கை 45% அளவும் இருந்திருக்கு.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.