காலையில் உண்பதற்கு எது சிறந்து உணவு?

Video Description

குழந்தை பாக்கியம் பெறுவதற்கான உணவுகள் குழந்தை பெறுவது என்பது இந்த காலகட்டத்தில் மிக கடினமான ஒன்றாக மாறிவிட்டது இதற்கான காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுதான் கடந்த வாரம் அதிகாலையில் என்ன உணவு எடுத்துக் கொள்வது என்பதை பார்த்தோம் அதேபோன்று இந்த காணொளியில் காலை உணவு என்ன எடுத்துக்கொள்வது என்பதை பார்க்கப்போகிறோம் அதற்கு நாம் என்ன உணவு எடுக்க வேண்டும் என்றால் நம் உடலுக்கு தேவையான சக்திகள் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் இதனால் நம் உடல் எப்போதும் சரி சமமாக இருப்பதை இது பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த காலை உணவில் கார்போஹைட்ரேட் வைட்டமின் புரோட்டின் போன்றவைகள் இருக்கவேண்டும் பொதுவாகவே நம் தென்னிந்தியர்கள் இட்லி தோசை பொங்கல் போன்ற உணவுகளை காலையில் எடுத்துக் கொள்கிறோம் இதை எடுத்துக் கொள்வது தவறில்லை ஆனால் அதிகமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதாவது தோசையில் எல்லாவிதமான காய்களையும் நறுக்கி போட்டு ஒருவிதமான காய்தோசை சாப்பிட வேண்டும் அப்படி இல்லை என்றால் உப்புமாவில் எல்லா காய்கறிகளும் கலக்கவேண்டும் சிறுதானியங்கள் என்று அழைக்கப்படும் கேழ்வரகு கம்பு தினை குதிரைவாலி சாமை வரகு போன்றவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் செய்யப்படும் உப்புமா அல்லது சாதங்களை நாம் காலை உணவாக எடுத்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியம் அடையும் இதற்கு நாம் தேங்காவினால் செய்யப்படும் சட்னியை தவிர்த்து காய்கறிகளால் செய்யப்படும் சட்னியை உபயோகப்படுத்தலாம் தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் சிறுதானியங்களை தவிர்க்க வேண்டும் இதற்கு பதிலாக அவர்கள் அதிகமாக காய்கறிகளை சேர்த்து காலை உணவை உண்ணலாம் பின்பு நமக்கு புரதசத்து தேவைப்படும் இதற்காக நாம் பால் குடிப்பதை தவிர்த்து தயிரினால் செய்யப்பட்ட எதையாவது சாப்பிடலாம் அல்லது மோர் குடிக்கலாம் இந்த உணவை தினமும் காலையில் கடைபிடித்தால் நம் உடல் வலிமை பெற்று குழந்தை பாக்கியம் விரைவில் நமக்கு கிடைக்கும். குழந்தையின்மை / ஆண் / பெண் / உணவு / சிகிச்சை / மருத்துவம் / ஆரோக்கியம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.