காது குத்துவது எதற்காக..?அதன் சிறப்பு என்ன?

Video Description

காது குத்துவது எதனால் நாம் செய்யும் ஒவ்வொன்றிற்கும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கும் என்பது உண்மை, ஆனால் இவை அனைவர் மனதிலும் ஏற்கும் எண்ணத்தினால் தான் அதன் மேல் கடவுள் நம்பிக்கை மற்றும் அழகு சம்பந்தமான சில விஷயங்களை நம் முன்னோர்கள் நமக்கு சாதுரியமாக சொல்லி விட்டு சென்று விட்டார்கள். இது அனைத்திற்கும் பின்னாலும் ஒரு அறிவியல் சார்ந்த நன்மைகள் இருக்கிறது அது போன்றுதான் காதுகுத்துவதன் நன்மைகளை இந்த காணொளியில் பார்க்கலாம். சிறு குழந்தைக்கு அதாவது ஒரு வயதில் இருந்து மூன்று வயதிற்குள் காது குத்துவார்கள் அல்லது 6 வயதில் இருந்து ஏழு வயதில் காது குத்துவார்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு வயதில் இவர்கள் காது குத்துவார்கள் ஆண் பெண் என்று பாராமல் அனைவருக்கும் இந்த காது குத்தும் திருவிழா நடத்தப்படும் இது இந்துக்களில் அதிகளவு கொண்டாட்டப்படுவார்கள். இது எதற்காக என்றால் காதுகுத்துவதனால் நமது சக்தி மண்டலம் சரியாக செயல்படும் அது ஒரு சமநிலையில் இருக்கும் இதுமட்டுமல்லாமல் மூளைக்கு நல்லது நம் சிந்தனைக்கு அது உதவுகிறது அதுமட்டுமல்லாமல் நம்முடைய ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் அவர்களது வலியை இது போக்கிறது நம் உடலில் இருக்கும் ஜீரண சக்தி நல்லபடியாக வேலை செய்ய இது உதவுகிறது காதுகுத்துவதனால் இன்னும் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருக்கிறது குறிப்பாக அக்குபஞ்சரில் எப்படி உடம்பில் துளைபோட்டு நம் வலிகளை போக்கிறார்களோ அதேபோன்றுதான் காதில் போடப்படும் ஒரு துணையால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் நடக்கிறது இது ஒருவகையான சிகிச்சை என்றே சொல்லலாம். காதணிகள் / குழந்தைகள் / ஆண் / பெண் / அறிவியல் / ஆரோக்கியம் / நன்மை / முன்னோர்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.