முடி அதிகமாக உதிர்வதற்கான காரணம் என்ன ?

Video Description

முடி உதிர்வதற்கான காரணம் பெண்களுக்கு முடி உதிர்வது என்பது மிகவும் கவலைக்கிடமான ஒரு விஷயமாகும் இதனால் இவர்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி தன் தலையில் பயன்படுத்தி வருகிறார்கள் முடி உதிர்வதற்கான உண்மையான காரணம் என்னவென்றால் பொதுவாகவே குழந்தை பிறந்த சில நாட்களுக்கு பின்பு பெண்களுக்கு முடி உதிர்வு ஆரம்பமாகிறது இது இவர்களுக்கு இயற்கையாகவே இது துவங்கும் ஆனால் சில நாட்களுக்குப்பின் இது குணமாகிவிடும் பின்பு தலையில் ஏற்படும் கிருமிகள் மற்றும் அழிக்கு உற்பத்தியால் முடி உதிர்வு ஏற்படும் அதிக ரத்த அழுத்தம் இருக்கும் பெண்கள் மற்றும் மூட்டுவலி மனசோர்வு போன்றவைகளால் முடி உதிர்வடையும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அதிகளவு மருந்து மாத்திரைகள் எடுப்பவராக இருந்தால் இவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படும் இதைத் தவிர்த்து நாம் பயன்படுத்தும் சீப்பு நெருக்கமான பற்கள் இருந்தால் அது முடியில் அதிக அளவு அழுத்தம் கொடுத்து நமது முடி வேரோடு உதிர்வதற்கு வாய்ப்பிருக்கிறது இதனால் பற்கள் அதிக இடைவெளி உள்ள சீப்பை பயன்படுத்த வேண்டும் தைராய்டு இருப்பவர்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படும் பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் மன அழுத்தத்தினால் அதிகளவு உதிர்ந்து விடும் எனவே நம் தலை முடியை நன்றாக இறுக்கி கட்டுவதை தவிர்த்து காற்று உள்ளே செல்லும் அளவுக்கு கூந்தலை கட்ட வேண்டும் இப்படி சொல்லப்படும் அனைத்தையும் நாம் பின்தொடர்ந்து நம் முடி உதிர்வை தடுக்க முடியும். முடி / உதிர்வு / பிரச்சினை / ஆண்கள் / பெண்கள் / தீர்வு / ஆரோக்கியம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.