தேனை பயன்படுத்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

Video Description

தேனின் நன்மைகள் தேன் ஒரு இனிப்பு பொருள் பல மருத்துவ குணங்களை கொண்ட இந்தத்தேன் பூக்களிள் காணப்படுகின்றன. தேனீக்கள் பெரும் உழைப்பால் கஷ்டப்பட்டு கொண்டு வந்து சேர்க்கும் இந்த தேனை மக்கள் அதை விட பல கடுமையாக உழைத்து அதை எடுத்து வைக்கிறார்கள். 9000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நாம் தேனை எடுத்து பருகி வருகிறோம். தேனில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன அதில் சிலவற்றை இங்கு காணலாம். சிறிதளவு தேனைக் கொண்டு தினமும் முகம் கழுவி வந்தால் முகம் மிகவும் சுத்தமாக அதுமட்டுமில்லாமல் நமக்கு இளமையான தோற்றத்தைத் தரும், சுடு தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து தேன் ஊற்றிப் குடித்து வந்தால் தொண்டை பிரச்சனை மற்றும் இருமல் ஏதாவது இருந்தால் உடனே சரியாகும், அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நாம் உறங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது இதற்கான தீர்வு உள்ளது பாலில் சிறிது தேனைக் கலந்து குடித்தால் தூக்கம் நன்றாக வரும், உடல் எடையைக் குறைப்பதற்காக பல உடற்பயிற்சிகள் செய்து இருப்போம் சுடுதண்ணியில் சிறிதளவு தேனுயும், பட்டை பொடியும் கலந்து குடித்து வந்தால் உடல் எடை மிகவும் குறையும், கடைசியாக காயம் ஏற்பட்ட எந்த இடத்தை வேண்டுமானாலும் சிறிது தேனை தடவினால் காயம் மிக சீக்கிரமாகவே குணமாகும். தேனின் நன்மை / இனிப்பு பொருள் / தேனீக்கள் / இளமையான தோற்றம் / தூக்கம் நன்றாக வரும்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.