வெல்லம் சாப்பிட்டு வெந்நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா...!

Video Description

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது .மேலும் இதனை சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து ஞாபக சக்தியை கூட்டும். ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்க கூடிய ஆட்கள் இந்த வெள்ளத்தை உண்பதால் ஏற்படும் சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு இதை மருந்தாக பயன்படுத்தி உள்ளன. ஒவ்வாமை என்று சொல்லக்கூடிய ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி ஆக்சிடென்ட் அதுமட்டுமல்ல இது ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது. வெல்லத்தில் நீர்த்தன்மை இருப்பதால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் சமச்சீர் அடையும். வெல்லத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். செரிமான திரவங்களை தூண்டிவிட்டு ஜீரணத்தை சரி செய்கின்ற சக்தி வெல்லத்துக்கு உண்டு. பித்தம் வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து தரலாம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச்சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது அதை வெள்ளை யாக்வதற்காக சில ரசாயனங்களை சேர்ப்பதால் இரும்புச்சத்து அழிக்கப்பட்டு விடுகிறது .இந்த இழப்பு வெல்ல செய்யும் போது ஏற்படுவதில்லை. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக்கூடிய குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிதளவு உண்டாலே போதும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும் காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும் சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும் .வெல்லம் சாப்பிட்டபின் அதனுடன் சேர்த்து வெந்நீர் குடிப்பதால் இந்த நன்மைகள் முழுமையாக நமக்கு கிடைக்கிறது. வாய்வுத் தொல்லை மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இரு துண்டு வெல்லம் சாப்பிட்டு அதனோடு ஒரு டம்ளர் இளம் சூடான வெந்நீர் சாப்பிட்டு வருவதால் அவர்களுக்கு அவை சரியாகும். இரவு உறங்கும் முன் ஒன்றிரண்டு வெல்லத்தை சாப்பிட்டு அதனுடன் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தி வந்தால் அவர்களுக்கு இறுக்கமான மனநிலை நீங்கி சந்தோஷமான மனநிலை ஏற்பட்டு இரவு உறக்கம் நன்றாக கிடைக்கும். வெள்ளத்தில் வெள்ளைச் சர்க்கரையில் இருப்பதைவிட அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் பற்கள் மற்றும் எறும்புகளுக்கு உறுதியளிக்கிறது. வெல்லத்தோடு ஏலக்காயும் சேர்த்து மென்று தின்று வந்தால் வாய் துர்நாற்றம் அகலும். அத்தோடு ஒரு டம்ளர் நீரையும் குடித்து வருவதால் வாய் துர்நாற்றம் அடிக்கும் என்ற கவலை தேவையில்லை வாயில் உள்ள தீமை விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களை இவை இரண்டும் அழித்துவிடும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.