கோவிலில் உள்ள மரத்தை சுற்றுவதால் என்னென்ன பலன்கள்..!

Video Description

நமது முன்னோர்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தல விருட்சத்தை வைத்து வழிபட்டார்கள் .அது புளியமரம் ,அரசமரம், வேம்பு ,வன்னி, பாரிஜாதம் ,பனை போன்றவையாக இருந்தது. இந்த மரத்தினை அந்த ஊர்ப் பகுதிகளில் வெட்டக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்துள்ளது. தல விருட்சத்தை சுற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம். பிள்ளையார் அமர்ந்திருக்கும் அரச மரத்தை சுற்றினால் பிள்ளை வரம் கிடைக்கும். அம்மனின் அம்சமாக கருதப்படும் வேப்ப மரத்தை சுற்றி வந்தால் கர்ம வினைகள் யாவும் தீரும். விடத்தலை மரம் சனி தோஷத்தை போக்கும் ஏழரைச்சனி யை நிவர்த்தி செய்யும். பின்னை மரம் திருமண தடைகளை நீக்கி விரைவில் மனம் ஆகக்கூடிய யோகத்தை அளிக்கும். சந்தன மரம் பிள்ளைகளின் தீய பழக்கவழக்கங்களை தீர்த்துவைக்கும். பிள்ளைவரம் கிட்டாத தம்பதியர்கள் பும்ஷிக மரத்தை மனதார வேண்டி சுற்றி வந்தால் புத்திர பாக்கியத்தை மிக விரைவில் கொடுக்கும். அரிச்சந்திர மரத்தை சுற்றி வணங்கிவர ஏவல் பில்லி சூனியங்கள் நம்மை விட்டு விலகி ஓடும். குருந்த மரத்தை சுற்றி வந்தால் வீடு வாகன சேர்க்கை விரைவில் உண்டாகும். கொன்றை மரத்தை சுற்றிவந்தால் துஷ்ட சக்திகளை விரட்டி நல்ல சக்திகளின் ஆசியை வழங்கும். யார மரத்தை சுற்றி வழிபட கல்வி அறிவு நல்ல ஞானம் கிட்டும். கரு நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி அருட்பார்வை உள்ளது அதனால் அந்த மரத்தை சுற்றி வந்தால் சகல சம்பத்தும் ஐஸ்வர்யமும் கிடைக்கும். நத்தைச்சூரி யை சுற்றி வந்தால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும். கல்லால மரத்தை சுற்றிவந்தால் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களையும் உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும். குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு நெல்லி மரம் வில்வ மரம் இருந்தால் அந்த வீடு லட்சுமி கடாட்சம் ஆக அமையும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.