இந்தோனேசிய ரூபாய் நோட்டில் விநாயகர்.. எப்படி வந்தது தெரியுமா..?

Video Description

இந்து சமயத்தினரால் முழுமுதற்கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர் ஆவார். இந்தியாவில் இவரின் புகழ் எல்லோருக்கும் தெரியும். இந்தியர்கள் அதிகம் இல்லாத முஸ்லீம் மக்கள் அதிகம் இருக்கும் இந்தோனேசியாவில் விநாயகரின் புகழ் பரவியுள்ளது. இது எப்படி..? சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா நாட்டின் 2000 ரூபாய் நோட்டில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த நாட்டில் 87% முஸ்லிம் மக்களும், 2% இந்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர் . இந்தோனேசியாவில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் பாலித்தீவில் செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கருதப்படுகிறார். இதன் காரணமாக இந்தோனேசியாவில் 2000 ரூபாய் நோட்டில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . இதுமட்டும் அல்லாமல் 15, 16ஆம் நூற்றாண்டுகளில் பல தமிழர்களும், இந்தியர்களும் வர்த்தக ரீதியாக தொடர்ந்து இந்தோனேசியாவுடன் தொடர்பு வைத்திருந்தனர். இதன் காரணமாக இந்திய மொழி மற்றும் கலாச்சாரம் இன்றும் அந்நாட்டில் நடைமுறையில் உள்ளது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.