ராவணனை வழிபடும் கிராமம்..!

Video Description

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சீக்காளி கிராமத்தில் வாழும் மக்கள் அரசனான ராவணனை வணங்குகிறார்கள். அவ்வாறு செய்வதால் ராவணன் அவர்கள் கிராமத்துக்கு நன்மை செய்வதாக அவர்கள் நம்புகிறார்கள். அந்த கிராமத்து மக்களின் வழக்கப்படி நவராத்திரியில் பத்தாம் நாள் அதாவது நம் விஜயதசமியன்று கொண்டாடுகிறோமே அந்த நாளன்று ராவணனை இவர்கள் வழிபடுகிறார்கள். ராவணனை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி அங்கு மிகவும் பிரபலமானதாகும். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள். ராவணன் கோயில் பூசாரி பாபுபாய் ராவண் தான் அனைத்து பூஜைகளையும் செய்கிறார். கிராமத்திலே விதமான பிரச்சனைகள் வந்தாலும் மக்கள் உடனே பாபுபாய் ராவணனிடம் தான் செல்கின்றனர். உடனே ராவணனை திருவுருவச் சிலை முன் அமர்ந்து விரதம் இருக்கும் பாபுபாய் பிரச்சனை தீர்ந்த பின்னர் தான் தனது விரதத்தை முடிக்கிறார்.ஒருமுறை அந்த கிராம மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. உடனே பாபுபாய் விரதம் இருக்கத் தொடங்கினார் என்ன அதிசயம் மூன்று நாட்களில் பேய் மழை பெய்து ஊரணிகள் நிரம்பி வழிந்தன. பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வாழும் மக்கள் ராவணனை மட்டுமே வழிபட்டு வந்தனர். ஒருமுறை பல்வேறு காரணங்களினால் நவராத்திரி தசமியன்று ராவண சிறப்பு பூஜைகள் செய்ய முடியாமல் போனது .அதனால் அந்த கிராமமே தீக்கிரையானதாம். கிராமத்தில் இருந்த ஒரு வீட்டைத் தவிர மத்த வீட்டை சித்தியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போயிற்றாம் .இந்த கிராமத்தில் வாழும் பெண் பேசுகையில் இந்தியாவில் ராவணனை வழிபடுவது ஒன்றும் புதிதல்ல பல்வேறு பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள். நமது அண்டை நாடான இலங்கையில் ராவணனுக்கு கோயில்களை நிறைய உள்ளது என்கிறார் இவையெல்லாம் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இல்லை மூட நம்பிக்கையா என தெரியவில்லை.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.