விஜய்க்கு வில்லனாகும் விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Video Description

ஆண்டுக்கு அரை டஜன் படங்களில் நாயகனாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அதிலும் சமீபகாலமாக தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்றும் தனது எல்லையை விரிவுபடுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. சசிகுமாரின் 'சுந்தரபாண்டியன்' படத்தில் முதல் முறையாக வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி, அதன்பிறகு 'விக்ரம் வேதா', 'பேட்ட' ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்த நிலையில், பிகில் படத்தை அடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64வது படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் வேதா படத்தைப்போலவே இந்த படத்திலும் வில்லன் வேடம் ஹீரோவுக்கு இணையாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்த விஜய் சேதுபதி, இப்படியொரு வாய்ப்பு இருப்பதாக சொன்னதும் உடனே ஓகே பண்ணி விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இந்த தகவலை இன்னும் விஜய் சேதுபதி உறுதிப்படுத்தவில்லை.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.