50 நாள்களில் 32 குழந்தைகள் மரணம்.. பதறவைக்கும் காரணங்கள்..!

Video Description

உத்தரப்பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தில் மகளிருக்கென தனி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில், நோய்வாய்ப்பட்டுப் பிறக்கும் குழந்தைகளுக்கான பராமரிப்புப் பிரிவில் (Sick Newborn Care Unit), கடந்த 50 நாள்களில் மட்டும் 32 குழந்தைகள் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கின்றனர். `குழந்தைகளுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் செலுத்தப்படவில்லை. மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சைதான் குழந்தைகள் மரணத்துக்குக் காரணம்' எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால், `குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனை நிர்வாகம் மட்டுமே காரணமல்ல'' என மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து, அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ரேகா ராணி பேசும்போது, ``கடந்த மாதத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட மிக அதிகம். அதில் பல குழந்தைகள் முக்கிய உறுப்புகள் செயலிழந்த நிலையில்தான் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் இறந்தும் போயினர். இருப்பினும் ஒருசில குழந்தைகளைச் சிகிச்சையின் மூலம் காப்பாற்றியிருக்கிறோம். நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அடிப்படை மருத்துவ வசதிகள் இன்றி பிஞ்சுக் குழந்தைகளின் உயிர்கள் பறிபோவது பல்வேறு கேள்விகளை மனதில் எழச் செய்கிறது. இதற்கெல்லாம் விடிவு எப்போது?

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.