மென்மையான சருமம் பெற உதவும் பப்பாளி பேஸ் மாஸ்க்..!

Video Description

பப்பாளி பழத்தின் மூலமாக முகப் பொலிவு பெறலாம் முகப்பொலிவு பெறுவதற்காக பெரும்பாலான பெண்கள் அழகு நிலையத்திற்கு செல்கிறார்கள் இதை தவிர்த்து சில பெண்கள் வீட்டிலேயே தங்களுக்குத் தெரிந்த பொருட்களை வைத்து முகத்தில் பூசிக் கொள்கிறார்கள் ஆனால் எதை செய்தாலும் அதைப் பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்து செய்வதன்மூலம் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் இதுபோன்று பப்பாளி பழத்தின் மூலமாக நம் முகத்தை பொலிவடைய செய்ய முடியும் இதற்காக நாம் பெரிய தொகை ஏதும் செலவு செய்ய வேண்டாம் வெறும் பப்பாளிப்பழம், கசகசா, தயிர், தேன் மற்றும் எலுமிச்சை இருந்தால் போதும் இதை அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்றாக ஒரு கிரீம் வடிவத்திற்கு கொண்டு வரவேண்டும் பின்பு அதை நம் வீட்டில் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியில் அரைமணி நேரம் வைக்க வேண்டும் பிறகு அதை எடுத்து நமது முகத்தில் தடவி நன்றாக காய விட வேண்டும் சில மணி நேரத்திற்கு பின்பு அதை வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின்பு குளிர்ச்சியான ஐஸ்கட்டிகள் மூலமாக நம் முகத்தில் மெதுவாக தடவ வேண்டும் இதை செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கும் ரத்த நாளங்கள் விரிவடையும் இதை செய்த உடனே நம் முகம் மிக பொலிவுடன் அழகாக தெரிய இது உதவும். பப்பாளி / முகம் / பொலிவு / கசகசா / தயிர் / எலுமிச்சை / தேன்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.