அனில் பற்றி அறியப்படாத உண்மைகள்..!

Video Description

அணில் மரத்தில் வசிக்கும் ஓரு கொறிணி ஆகும். இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர் சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகள் காணப்படும். வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக் கும் சிறிய கால்களுடன் மரங்களில் ஏறுவதற்கு வசதியாக கூர்மையான நகங்கள் இருக்கும் இவற்றின் முன் பெரிதாகவும் கூர்மையாகவும் இருக்கும. இவை கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் கூடுகட்டி வசிக்கும் விலங்கு தேங்காய் நார் பஞ்சு முதலியவற்றைக் கொண்டு கூடுகட்டும் பெரும்பாலும் விதைகள் கொட்டை பழங்கள் இவற்றை உணவாக உட்கொள்ளும். தங்களுக்கு ஆபத்து நேரும்போது பயங்கரமான ஒலி எழுப்பி எதிரிகளின் கவனத்தை திசைதிருப்பும் பார்க்கும் அணில்களும் நம் நாட்டில் உள்ளது. ஒளி உலகிலேயே அதிக அளவு காடுகள் உருவாகுவதற்கு காரணமாக இருந்த ஒரு சிறு விலங்காக இந்த அணியை நாம் கூறலாம் ஏனென்றால் அதிகப்படியான பழங்களை உண்ண கூடிய ஒரு உயிரினம் எது வென்றால் அது அணில்தான் அணில் கடித்தபழம் மிகவும் இனிப்பாக இருக்கும் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. இந்த பழத்தின் விதையை கொறித்து தின்றபின் எந்த இடத்தில் வைக்கிறது என்பதை அணில் மறந்துவிடும். அப்படி அணில் மறந்து விட்டு விட்டுச் சென்ற விதைகளை இன்று கோடிக்கணக்கான மரங்களாக நிமிர்ந்து நம் முன்னால் காட்சி அளிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனா இது தான் எதார்த்தமான உண்மை. அணில் ராமனுக்கு மட்டும் பாலம் கட்ட உதவவியது போல் நமது சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கஉதவுகிறது என்றால்வியப்பாகஇருக்கிறதல்லவா. ஐந்தறிவு ஜீவனுக்கு தெரிந்தது ஆறறிவு ஜீவன்களுக்கு ஏன் தெரியவில்லை .இனியாவது இருக்கும் மரங்களை காக்க முற்படுவோம். மூச்சுக்காற்றை கூட இனி விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.

@@include("partials/call_to_action.html") @@include("partials/footer.html") @@include("partials/base_scripts.html")