மனித உடல் இரும்பு சக்தி பற்றி அறியப்படாத உண்மைகள்..!

Video Description

மனிதனுடைய உடலுக்கு இரும்புச்சத்து என்பது மிகவும் தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும். இந்த இரும்புச்சத்தானது குறைந்த அளவில் தேவைப்படும் மிகவும் அவசியமானதாகும் இது இயற்கையில் பெருமளவு கிடைக்கிறது. உயிரணுக்களின் பெருக்கம் வளர்ச்சி போன்றவற்றிற்கு இரும்பு முக்கியமான மூலப்பொருள் இரும்புச்சத்து குறைவால் போதிய ஆக்சிஜன் இல்லாமல் தளர்ச்சியும் வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் குறைபாடும் ஏற்படுகிறது அதே சமயத்தில் இரும்பு சத்து அதிகமாகி விடும் எனவே தேவையான அளவு இருக்க வேண்டும். உலகில் 80 சதவீத மக்கள் இரும்புசத்து குறைவாக உள்ளவர்களை இதில் 30 சதவீதமான மக்கள் இரும்பு குறைவதால் வரும் இரத்தசோகையை கொண்டவர்கள் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது .ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நமது உடலில் உள்ள இரும்புச்சத்தை கொண்டு ஓர் ஆணியை நாம் செய்யலாம். ஏற்பதே உங்களுக்கு வியப்பாக இருக்கிறதல்லவா ஆனால் அதுதான் உண்மை. மனிதன் உடம்பில் இருக்கக்கூடிய இரும்பு சத்துகளை ஒன்று திரட்டினாரல் நம் வீட்டில் சுவரில் அடிக்கும் ஓர் ஆணியை உற்பத்தி செய்யும் அளவுக்கு இரும்பானது நம் உடலில் உள்ளது என்றால் உங்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். அசைவ உணவில் பெரும்பாலும் ஆடு ,கோழி, மீன் ,கருவாடு ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதே போல் சைவ உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் கீரை வகைகள், பாகற்காய் ,சுண்டைக்காய் கொத்தவரங்காய் ,பேரீச்சம்பழம் உலர் திராட்சை ,வெல்லத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.