சர்க்கரை நோயை இயற்கையாக தடுக்கும் 3 உணவுகள்

Video Description

நீரிழிவு நோயாளிகள் உணவில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம். இனிப்பு நிறைந்த உணவுகள், ஏரேட்டட் ட்ரிங்க்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து கொள்வதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில இயற்கை உணவுகளை பார்ப்போம். பெரிய நெல்லி பெரிய நெல்லியில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது. இதில் வைட்டமின் சி இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். மேலும் இதில் இருக்கும் க்ரோமியம் மற்றும் தாதுக்கள் இன்சுலின் சுரப்பை சீராக வைக்கிறது. மஞ்சள் மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை உள்ளது. மஞ்சளில் குர்குமின் என்னும் பொருள் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும். வெந்தயம் வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை தாமதப்படுத்தும். இதனால் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக உறிஞ்சப்படும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.