இந்தியாவில் பார்க்க வேண்டிய 10 முக்கியமான சுற்றுலா தலங்கள்!!

Video Description

இந்தியாவில் உள்ள அனைவரும் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர் ஆனால் இந்தியாவிலேயே மிக அழகாகவும் பழமைமிக்க பல இடங்கள் இருக்கின்றன. இதில் முதலில் ஸ்ரீநகர் உள்ளது ஸ்ரீநகர் என்றவுடன் நம் அனைவருக்கும் தோன்றுவது கொடுமையான பனிபடர்ந்த ஒரு ஊர் ஜம்மு அண்ட் கஷ்மிர் இன் தலைநகரமாக இருந்த ஸ்ரீநகரில் பல சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன அதில் சிறந்தது தால் ஏரி ஆகும் இதில் படகு சவாரி செய்தல் படகு வீடுகளில் தங்குதல் போன்ற வசதிகள் உள்ளது. அதை தவிர்த்து வண்ணமிகு கொண்ட சலிமர் போன்ற பூக்கள் தோட்டங்கள் உள்ளது. இங்கு அதிகமாக காய்ந்த பழங்கள் மற்றும் காஷ்மீர் மக்கள் கைகளால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் இருக்கின்றன. 2. ராஜஸ்தானின் தலைநகரமாக இருக்கும் ஜெய்ப்பூரில் ஒரு காலத்தில் ராஜ குடும்பங்கள் இங்கு ஆட்சி நடத்தி வந்தார்கள். இதை பழங்காலத்து நகரம் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்றன இங்கே பல கோட்டைகள் மற்றும் பூங்காக்கள், மாளிகைகள் இங்கு இருக்கின்றன, 3.ஆக்ரா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தாஜ்மஹால், தாஜ்மஹால் ஒரு காதல் சிற்பம் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் உலக ஏழு அதிசயங்களில் ஒரு அதிசயம் இது. இதைப் பார்ப்பதற்காக ஆண்டுதோறும் பல நாடுகளில் இருந்து மக்கள் வருகிறார்கள் தாஜ்மஹாலை தவிர்த்து அங்கு கோட்டைகளும், கட்டிடங்களும் இருக்கின்றன.4. பாண்டிச்சேரி தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு யூனியன் டெரிடோரி பாண்டிச்சேரி ஆகும். இங்கு சுற்றுலாவிற்கான பல இடங்கள் உள்ளன வெளி நாட்டில் இருப்பது போன்ற இங்கே பூங்காக்கள், பிரெஞ்சு அரசால் கட்டப்பட்ட பல கட்டிடங்களும், சாலைகளும் இருக்கின்றன இங்கே பல வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர் காரணம் அந்த ஊரின் அழகு. 5. உதைபுர் இதுவும் ராஜஸ்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும் இங்கு பல மாளிகைகளும், கட்டிடங்களும் மட்டுமல்லாமல் நீர்வீழ்ச்சிகள் மனதை கொள்ளை கொள்ளும் பல இடங்களும் இங்கு அமைந்துள்ளது. 6. காங்க்டாக், சிக்கிமில் இருக்கும் இந்த இடம் ஒரு மலைப் பிரதேசமாகும். கண்ணைப் பறிக்கும் அழகு கொண்ட இந்த ஊரில் திபெத்திய மக்களின் உணவுகள் அதிகம் கிடைக்கின்றன. 7. மைசூர் மைசூர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அங்கிருக்கும் கோட்டைகளும் மாளிகைகளும் தான் இது தவிர்த்து அங்கு பல இடங்கள் இருக்கின்றன அதிலும் அங்கு உயிரியல் பூங்காக்கள் படகு சவாரி போன்ற பல இடங்கள் இருக்கிறது. 8. நைனிடால் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் இடம், இங்கு அழகான நைனிடால் ஏரி ஓம் இந்து தேவி கோவிலும் மற்றும் கேபிள் கார் அதன் மேலிருந்து நாம் அந்த மொத்த நகரத்தையும் பார்க்க முடியும். 9. கொல்கத்தா, ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக பயன்படுத்தப்பட்ட இந்த நகரம் வணிகத்திற்கு பெயர்போன ஒன்று இங்கு சுற்றுலாத்தலம் என்று அழைக்கப்படும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இருக்கின்றன இது ஒரு திருவிழா நகரம் என்றும் அழைக்கப்படுகிறார்கள் 10.மும்பை இது ஒரு தூங்கா நகரம், இங்கு இரவுகளிலும் பல அங்காடிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன தாஜ் ஹோட்டல், மெரைன் டிரைவ் என்று எண்ணிக் கொண்டே போகலாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.