இயற்கையான முறையில் அடர்த்தியான தலை முடியைப்பெற உதவும் குறிப்புகள்

Video Description

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. குறிப்பாக பெண்கள் அடர்ந்த கூந்தலை மிகவும் விரும்புகிறார்கள் .அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் பழக்கவழக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டு முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது . முடி உதிர்தல் பிரச்சனைக்கு மிகவும் முக்கியமாக காரணமாக இருப்பது மக்கள் இன்று இயற்கை வழியை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்ததுதான். இதனால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகிறது முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக முடியைப் பெறுவதற்கு இயற்கையான வழி என்ன உள்ளது என்பதை பற்றி இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். முட்டையின் மஞ்சள் கரு 2 டேபிள்ஸ்பூன், விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் ,சோற்றுக் கற்றாழை ஜெல் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளவேண்டும் முட்டை மஞ்சள் கரு மற்றும் சோற்றுக்கற்றாழை சாறு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து தலைமுடி முழுவதும் தடவி விட வேண்டும். பின் அரை மணிநேரத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரில் ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்வதால் விளக்கெண்ணெயின் மூலம் உடலுக்கு குளிர்ச்சியும் தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் உதவிகள் அது முட்டையின் மஞ்சள் கருவானது தலை முடி உதிர்தல் இருந்து நம்மை பாதுகாக்கும் கண்டிஷனராக செயல்படுகிறது வெளிப்புறத்திலிருந்து தலைமுடியை வைக்கிறது சோற்றுக்கற்றாழை அருமையான பலன்களை அளிக்கிறது இதன் மூலம் முடி மென்மையாக முடியின் வறட்சி போக்கி வறட்சி நீங்கி பளபளப்பாக வளர உதவுகிறது. எண்ணை தடவாமல் இருந்தால் கருப்பு நிற முடி ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது .வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலைக்கு மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் ஆரோக்கியமாகவும் கருமை நிறத்துடனும் வளரும். முடி அடர்த்தியாகவும் கருமை நிறமாகவும் இருப்பதற்காக கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து சூடான எண்ணெயில் சேர்த்து ஒரு வாரத்திற்கு ஒரு முறை அதை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வர முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும். செம்பருத்தி எண்ணெய் முடியின் வேர்க்கால்களை பலப்படுத்துவது உடன் சிறந்த நிறமூட்டி ஆகவும் பயன்படுகிறது செம்பருத்திப் பூக்களை சூடான எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்து தினமும் தடவி வந்தால் முடி அடர்த்தியாக வளரும். வெளியே செல்லும்போது வெயில் நேரடியாக நமது முடியில் படாதவாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் .எனவே வெளியில் செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு செல்வது மிகவும் நல்லது. இது சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து நமது முடியை பாதுகாத்து இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவும்.

@@include("partials/call_to_action.html") @@include("partials/footer.html") @@include("partials/base_scripts.html")