கர்ப்பிணிகள் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய விஷயங்கள்...!

Video Description

கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டியவை பெண்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை நம் கண்முன் பார்ப்பதுதான் இப்படி மிகப் பெரிய சந்தோஷம் அவர்கள் வாழ்வில் நல்லபடியாக நிகழ வேண்டுமென்றால் அவர்கள் கர்ப்ப காலத்தில் இருக்கும் போது சில வழிகளை பின் தொடர வேண்டும் அது என்னவென்றால் அவர்கள் அதிக அளவு இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் இந்த சமயத்தில் இவர்களுக்கு வாந்தி என்பது அதிக அளவில் வெளியேறும் இதனால் ஒருபோதும் அவர்கள் உணவு அருந்துவதை தவிர்த்து விடக்கூடாது அவர்கள் வயிறு எப்போதும் ஏதாவது ஒரு உணவு எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் இதில் அவர்கள் அதிகளவு பச்சைக் காய்கறிகள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது இவர்களுக்கு பசி வரும் வரை காத்திருக்காமல் பசி எடுக்காத பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது இவர்கள் சோர்வடையும் நேரங்களில் ஏதாவது பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது அதிலும் ஆரஞ்சு பழச்சாறு இவர்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து தரும் இப்படி இருக்கும்போது இவர்களுக்கு ஏதாவது வாந்தி வரும் உணர்வு இருந்தால் எலுமிச்சை பழத்தை எடுத்து முகர்ந்து கொள்வது நல்லது இவர்கள் இரும்புச் சத்துள்ள கீரை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது அதேபோன்று பேரிச்சம்பழம் மாதுளம் பழம் போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு சிலரோ இரும்பு சத்துக்காக மருந்துகள் எடுத்துக் கொள்வார்கள் இந்த சமயங்களில் இவர்கள் சருமம் கருமை நிறமாக மாறும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் இது எந்த வகையிலும் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்காது அதே சமயத்தில் நீங்கள் கருநிறமாக மாறினாலும் சில நாட்களில் உங்களின் பழைய நிறத்திற்கே திரும்பி விடுவீர்கள் இதற்கு பயந்து நீங்கள் எந்தவித ஆரோக்கியமான உணவு மற்றும் மருந்துகளை தவிர்ப்பது என்பது முட்டாள்தனமாகும் இவர்கள் தங்களது சர்க்கரை அளவை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது இதனால் அவர்கள் உடம்பில் ஏற்படும் அதிகளவு வெப்பம் குறையும் இதற்கு அவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது தேவைப்பட்டால் அவ்வப்போது உடற்பயிற்சி செய்வது அவர்கள் குழந்தை பிறக்கும் நேரங்களில் வலியைப் பொறுத்துக் கொள்ள உதவும். கர்ப்பிணி / பெண்கள் / ஆரோக்கியம் / உணவு / இரும்புச்சத்து / குழந்தை / பலம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.