மழைக்காலங்களில் கை கொடுக்கும் குறிப்புகள்!

Video Description

பொதுவாக மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதன்மூலம் அதிகளவில் கிருமிகள் பரவ துவங்கும். அப்படி பரவும் கிருமிகள் நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில முறைகளை பயன்படுத்தலாம் நோய் வருவதற்கு முன்பே கூட இதை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் வருமுன் காக்கலாம். மழைக்காலங்களில் சிறந்த உணவாக மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். இரவு உறங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள் ,மிளகுத்தூள் ,பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது .எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி ,புடலை ,பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை மழை காலங்களில் உணவில் இருந்து தவிர்ப்பது நல்லது. பொரியல் செய்யும்போது அவற்றில் மிளகு பொடி சேர்த்து சமைத்து சாப்பிடுவது நல்லது இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு ,கீரை ஆகியவற்றைச் சேர்த்து கூடாது. மழைக் காலங்களில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைதயை போட்டு வைக்கலாம். .கீரைகளை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த தயிர் வெண்ணெய் நெய் போன்றவற்றை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஆனால் மோர் சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கு மிகவும் நல்லது உணவில் காரம் கசப்பு துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ உணவாக மீன் முட்டை கறி சிக்கன் போன்றவற்றை பிரஷ்ஷாக சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிக அளவு சாப்பிடக்கூடாது. சூடாக சாப்பிட வேண்டும் பஜ்ஜி போண்டா அதிகம் சாப்பிடாமல் உப்பு உருண்டை இட்லி சாம்பார் பிரட் ரோஸ்ட் என சாப்பிடலாம் .மேலும் தினமும் சாப்பிடும் உணவை சற்று சூடாக்கி சாப்பிட்டால் போதும். உணவுகளை பாதுகாக்க சில உணவுப்பொருட்களில் பூஞ்சைகள் பரவும் பருவம் மழைக்காலம் இதை தவிர்க்க சாப்பிடக்கூடிய அளவுக்கு மட்டுமே சமைப்பது நல்லது? பருப்பு மாவு போன்றவற்றை இறுக்கமாக காற்று புகாத பாட்டில்களில் அடைத்து வைக்க வேண்டும். பயிர் வகைகளை பூச்சிகள் அல்லது பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற அவற்றின்மீது கடுகு எண்ணையை சிறிதளவு தெளித்து வைத்தால் போதும் உணவு தானியங்கள் புத்துணர்வுடன் இருக்க அவற்றின் மீது சிறிதளவு ஆமணக்கு எண்ணெயை தெளிக்கவேண்டும். சமைத்த உணவை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கிளறி விட்டால் பாக்டீரியாக்கள் உட்காராது சப்பாத்திகளை சிறுவர்களில் சுற்றி வைப்பதின் மூலம் பாதுகாக்க முடியும் மழைக்காலங்களில் உடலில் இருக்கும் மூன்று தன்மைகளான வாதம் பித்தம் கபம் போன்றவற்றில் பாதிப்பு சுவாச சம்பந்தமான நோய்கள் இருமல் தொண்டை புண் போன்றவற்றை அதிகரிக்கிறது. இக்காலகட்டத்தில் கண்டங்கத்தரிக்காய் கொண்டு செய்யப்பட்ட குழம்பு கூட்டு போன்றவற்றை சாப்பிடுவதால் கபம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும் கொள்ளு ரசம் நோய் தொற்யை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உள்ளது. மழைக்காலத்தில் தயாரித்து அவ்வப்போது பருகி வந்தால் ஜலதோஷம் தொண்டைக் கட்டு இருமல் போன்றவற்றை முற்றிலும் நீக்கலாம். கொள்ளு ரசத்தை குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்து வந்தால் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.வயிற்றுப் போக்கு மழைக்காலத்தில் எளிதில் தாக்கும் அதை போக்க சாப்பிடும் முன் இரண்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும் வெந்நீர் குடிக்க வேண்டும். நிலவேம்பு கஷாயத்தை பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி குடித்தும் வரலாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.