தீபாவளி அன்று இதை செய்யாதீர்

Video Description

தீப ஒளி திருநாள் அன்று லட்சுமி ஆசி பெறுவதற்கு நாம் கடைபிடிக்க வேண்டியவை ஜாதி மதம் இனம் மொழி என்று பாராமல் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகை தான் தீப ஒளி திருநாள் இந்த திருநாளன்று நாம் ஏராளமான இனிப்புகள் உண்டு பட்டாசுகள் வெடித்து புது ஆடைகளை அணிந்து கொண்டாடுவோம் ஆனால் இந்நாளில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்கள் உள்ளது இதை தவிர்த்தால் நாம் லட்சுமியின் சாபத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்ப்படும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அது என்னவென்று இக்காணொளியில் பார்க்கலாம். காலையில் எழுந்திருக்க வேண்டும் அதிகாலை எழுந்திருக்காமல் இருப்பவர்களை லட்சுமி சாபம் அளிப்பார் தீபாவளி திருநாள் என்பது அதிகாலை முதலே ஆரம்பமாகும் சூழ்நிலையில் நாம் மிக விரைவில் எழுந்தால்தான் நம் வீட்டிற்கு லட்சுமி வருவார் என்கிறார்கள். எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும், நாம் சாதாரணமாக குளித்தால் லட்சுமி நம் மேல் சாபம் விடுவாள். அடுத்து நாம் கடைபிடிக்க வேண்டியவை பெரியோர்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும், பெரியவர்களை மதிக்க வேண்டும் தீப ஒளி அன்று அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். கடைசியாக நாம் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டின் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் நம் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் ஆரோக்கியமும் நீடிக்கும். தீப ஒளி திருநாள் அன்று இதைமறக்காமல் கடைபிடித்து லட்சுமியின் ஆசீர்வாதத்தை பெறுங்கள். தீப ஒளி திருநாள் / பட்டாசு / பலகாரம் / மகாலட்சுமி / ஆசீர்வாதம் / சாபம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.