கன்னியாகுமாரி-யில் இப்படியொரு இடமா..? என்ன ஒரு அழகு..!

Video Description

கன்னியாகுமாரி என்றாலே நம் நினைவிற்கு வருவது கடற்கரை தான். ஆனால் இந்த அழகான கடற்கரை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 54கி.மீ தொலைவில் அமைதியான சூழலில் அமைந்துள்ள இடம் தான் தேங்காய்ப்பட்டினம் கடற்கரை. அரபிக் கடலில் அமைந்துள்ள இந்த கடற்கரை பகுதி முழுவதும் தென்னை மரங்கள் சூழ்ந்து இயற்கை எழிலோடு நம் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். அழகான இந்தக் கடற்கரையில் வெள்ளை மணல்கள் பரந்து விரிந்து பார்ப்பதற்கு நம் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் அமைந்திருக்கும். இந்தக் கடற்கரையை தேங்காய்ப்பட்டினம் காயல் என்று அழைப்பார்கள். இங்குள்ள படகுகளில் சவாரி செய்வது தனிப்பரவசமாக இருக்கும். கடலின் அழகுகளையும், அவற்றில் சூழ்ந்திருக்கும் தென்னை மரங்களின் காட்சிகளையும் கண்டு ரசித்துக் கொண்டு படகுகளில் ஆனந்தமாக செய்தால் அந்த அனுபவமே வேறு. அனைத்திற்கும் மேலாக தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் முக்கிய ஆறான தாமிரபரணி ஆறு கலக்கின்றது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.