இள நீரில் விளக்கு எரியும் அதிசயம்!! எந்த ஊர்ல தெரியுமா?

Video Description

கோவில்கள் நம்முடைய மனதிலிருந்த அழுக்குகளையும் பாரங்களையும் போக்கும் ஸ்தலம். சில கோவிலுக்கு போகும்போதே நம் மனசுக்கு பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும். அப்படி நாம அடிக்கடி பார்த்திருக்கிற கோவில்களில் கூட, அட இங்க இப்படி எல்லாம் இருக்கா என ஆச்சரியப்படும் செய்திகளும் அதுல அடங்கி இருக்கு. அதை இங்க பாக்கலாம். திருவண்ணாமலைக்கு பக்கத்துல இருக்கிற தேவிகா புரம் பொன்மலைநாதர் கோயிலில் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில்தான் அபிஷேகம் நடக்குது மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இது அந்த கால சிற்பிகளுடைய திறமைக்கான ஒரு சபாஷ் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு எரிகிறது. புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் தன முருகனுக்காக கட்டப்பட்ட முதல் கோவில் . முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்கிறார்கள். பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.