கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?

Video Description

உலகிலேயே அதிக அளவு மனித உடலில் இருந்து அகற்றப்படும் ஒருப்பு எது தெரியுமா கைகால்களும் அல்ல பெண்களின் கருப்பை தான் உலகிலேயே அதிக அளவு அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்படும் உறுப்பு ஆகும்.இதை ஹிஸ்டணெரக்டமி என்பர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்று நோயும் ஒரு காரணமாகக் கூறலாம் ஏதோ ஒரு காரணத்துக்காக கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கும் பெண்கள் அதற்குரிய முறையான சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை சரியாக செய்யப்படாத கருக்கலைப்புகள் பின்னர் புற்றுநோய் கட்டிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகிவிடுகின்றன கிராமப்புற பகுதியில் இருக்கும் பெண்கள் இது போன்ற பாதிப்புகளால் அதிகம் ஆளாகி உள்ளார்கள் மட்டுமல்ல மாதவிடாய் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முறைகளை விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மாதவிடாய்க்கு துணிகளையே பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக உள்ளதும் இதற்கு உதாரணமாக நாம் கூறலாம். இதைத்தவிர பெண்கள் புகை பிடித்தாலும் 15 வயதுக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டாலும் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தாலும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் குழந்தை பெறாத பெண்கள் 55 வயதுக்கு மேற்பட்ட பின் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள் ஆகியோருக்கும் கருப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி இந்தியாவில் 12 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் அல்லது மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது இது நான்கு கட்டமாக வளர்ச்சியடைகிறது ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் கண்டுவிட்டால் நோயை கட்டுப்படுத்தலாம் இல்லை என்றால் உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள் கருப்பையின் உள்பக்க மட்டுமே பாதிக்கப்படும் இரண்டாம் கட்டம் கருப்பை சார்ந்த மற்ற பகுதிகள் பாதிக்கப்படும் உதாரணமாக பெலோபியன் குழாய்கள் கூறலாம் கருப்பைக்கும் வெளியேயும் பாதிப்பு ஏற்படும் உதாரணம் பெல்விஸ் பகுதிகள் நான்காம் கட்டம் கருப்பையை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும் உதாரணமாக கல்லீரல் சிறுநீரகம் போன்றவை. சென்னையில் வசிக்கும் பெண்களில் 30 பேரில் ஒருவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதாக ஒரு சர்வே கூறுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் அடிவயிற்றில் வீக்கம் முதுகிலும் இடுப்பிலும் வலி சில சமயம் அடிவயிற்றில் சுரீரென்று உருவாகும் வலி சிறுநீர் பிரச்சனைகள் ஆகியவை ஆரம்பகால குறியீடுகளாக இருக்கலாம் இவை உணர்ந்து கொள்ள முடியாத வகையிலும் இருக்கும் . கருப்பையின் கீழ்ப் பகுதியானது பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய் போன்ற அமைப்பில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் தான் இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது பொதுவாக வைரஸ் கிருமி தாக்கும் போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியை அதை எதிர்த்து வெற்றி கொள்வது சில பெண்களுக்கு இந்த கிருமி சில காலத்துக்கு உடலுக்குள்ளேயே அமைதியாக காத்திருக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காலத்தில் தாக்குதல் நடத்துகிறது. கருப்பை புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள் அசாதாரணமான ரத்தப்போக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் உடலுறவின்போது வலி ஏற்படும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தான் இவ்வகை புற்றுநோய் ஏற்படும் இதனால் அசாதாரண எடை இழப்பு எற்படும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.