ஸ்விகி-யின் மிக பெரிய திட்டம்..தாங்குமா மற்ற நிறுவனங்கள்?

Video Description

ஸ்விகி இன் அடுத்த இலக்கு. உணவுகளை இலவசமாக விநியோகம் செய்து வரும் பயன்பாட்டு இப்போது அனைத்து விதமான பொருட்கள் விநியோகம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஸ்விகியில் நமக்கு எந்த இடத்தில் எந்த உணவு எப்படி இருக்கும், அதன் விலை என்ன என்ற எல்லா தகவலும் அடங்கியிருக்கும், அதுமட்டுமில்லாமல் நமக்கு நேரடியாக சில சலுகைகளும், தள்ளுபடிகள் அள்ளிக் கொடுக்கிறார்கள் இப்போது இவர்கள் அடுத்த கட்டமாக ஸ்விகி கோ என்ற பயன்பாட்டை உருவாக்கியுள்ளார்கள். இதில் மருந்துகள், உணவுகள், ஏதாவது ஒரு பொருளை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், வீட்டு உபயோகப் பொருட்கள், பூக்கள் என்று அனைத்து பொருட்களையும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நாம் அனுப்பி வைக்கலாம். இதற்கென்று சில தொகையை நாம் செலுத்த வேண்டி இருக்கும். முதலில் இதை பெருநகரங்களில் சோதனை செய்யப்பட இருக்கிறது. முதல்கட்டமாக பெங்களூரில் இது செயல்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் அதற்கு அடுத்தபடியாக அனைத்து நகரங்களிலும் இது வந்துவிடும். ஸ்விகி / இலவசமாக விநியோகம் / ஸ்விகி கோ என்ற பயன்பாட்டை / சில தொகை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.