சூப்பர்ஸ்டாரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Video Description

ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ் கைக்வாட். இவர் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி 1950 இல் பிறந்தார். இவரின் துணைவியார் பெயர் லதா ரஜினிகாந்த் இவருக்கு சௌந்தர்யா ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளது. ஆரம்ப காலத்தில் சிவாஜி அலுவலக உதவியாளராகவும் தச்சராக வேலை பார்த்த ஒரு இடத்தில் மூட்டை தூக்கும் வேலை பார்த்தார் இதற்கு சம்பளமாக ஒரு மூட்டைக்கு பத்து பைசா கொடுக்கப்பட்டது பின்னர் பெங்களூர் போக்குவரத்து சேவை தேர்வு எழுதி நடத்துனர் உரிமம் பெற்றார். அவர் கண்டக்டராக இருந்தபோது 750 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார். நடிகராகும் ஆர்வத்துடன் சென்னை வந்த அவர் தன் நண்பர் ராஜ்பகதூர் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார் 1975 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார் ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது அதன் பிறகு 16 வயதினிலே காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்த பின்பு புவனா ஒரு கேள்விக்குறி முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் திரைப்படங்களில் நல்லவராக நடிக்கத் தொடங்கினார் பில்லா போக்கிரி ராஜா முரட்டுக்காளை போன்ற படங்கள் அவரை ஒரு அதிரடி கதாபாத்திரத்தின் மூலம் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். 1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன் மனிதன் தர்மத்தின் தலைவன் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தது 1990களில் அவர்கள் நடித்த அண்ணாமலை பாட்ஷா படையப்பா போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது . அதன்பிறகு ரஜினிகாந்த் எந்த படத்தில் நடித்தார் என்று நாங்கள் கூற வேண்டியதில்லை உங்களுக்கே தெரியும் . உழைப்பால் உயர்ந்தவர் வரிசையில் இவரைக் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு சுட்டிக்காட்டலாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.