எந்த கிழமையில் எந்த தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது உகந்தது...?

Video Description

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த கடவுளை அந்த நாளன்று தரிசித்து வழிபடுவது நல்லது என்பது பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம். திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினங்களில் ஒன்றாகும் .திங்கள் நீலகண்டனை விரதம் இருந்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது திங்களன்று சிவபெருமானுக்கு பால் அரிசி மற்றும் சர்க்கரை பொங்கல் படைக்கலாம். செவ்வாய்க்கிழமை ஹனுமாரை விரதமிருந்து வழிபடலாம். மேலும் துர்க்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் செவ்வாய் கிழமையாகும். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கையில் எல்லா வளமும் பெருகும். புதன் கிழமை விநாயகரை விரதமிருந்து வழிபட உகந்த தினமாக கருதப்படுகிறது. எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கும் முன் முதலில் வினாயகரை வணங்கி விட்டுதான் துவங்க வேண்டும். அப்போதுதான் அந்த காரியம் விக்னம் இல்லாமல் முடியும் என்பது சாஸ்திர ரீதியாக உணர்த்தப்படும் உண்மையாகும். வியாழக்கிழமை விஷ்ணு பகவானுக்கு பொதுவான நாள் அன்று விரதமிருந்து விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் இதுவே சரியான நாளாக கருதப்படுகிறது. அதுபோலவே வியாழக்கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாக வழிபடுவது மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும். சனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான் பெருமாள் ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபட நமக்கு எல்லா விதமான நலன்களும் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமையன்று நவகிரகத்தின் முதன்மையான கடவுளான சூரிய பகவானை விரதமிருந்து வழிபடுவது மிகவும் சிறந்தது சூரிய தோஷம் இருப்பவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும் என நம்பப்டுக்கிறது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.