தெருவெங்கும் பசுமை, நீர் மேலாண்மை.. சென்னையில் இப்படி ஒரு இடமா?

Video Description

நீர் மேலாண்மை குழுமம் சென்னை ஆர்கே நகர் மயிலாப்பூர் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் தங்கள் பகுதியை மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துள்ளார்கள் இதை இவர்கள் நீர் மேலாண்மையை கடைப்பிடித்து தங்கள் ஏரியாவையும் திட்டமிட்டு அழகுபடுத்தி வருகிறார்கள் இதை இவர்கள் சுமார் 5 வருடமாக செய்து வருகிறார்கள் சில வருடத்திற்கு முன்பு இங்கு சாலைகள் சரியாக இல்லாமல் இருந்திருக்கிறது எந்த ஒரு சாலை விளக்குகளும் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருந்த இந்த இடத்தை இவர்கள் ஒரு குழமத்தை அமைத்து அனைவரையும் ஒன்று சேர்த்து இந்த இடத்தை முழுமையாக மாற்றி உள்ளார்கள் இப்போது இந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் சுத்தமாகவும் இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு அழகிய பூங்கா போன்று இருக்கின்றன இதை தொடங்குவதற்காக இவர்கள் தெருவோரங்களில் மக்களைக் கூட்டி ஆலோசனை பெற்று அனைவரின் உதவியோடு இதை சரி செய்துள்ளார்கள் இந்த இடத்தின் பெருமை எதுவென்றால் இங்கே எந்த ஒரு குப்பைத் தொட்டியும் கிடையாது அனைவரின் வீட்டில் சுவர் அருகே ஒரு தொட்டியை வைத்து தேவையற்ற பொருட்களை அதில் நிரப்பி அதை மீண்டும் மறுசுழற்சி செய்து செடிகளுக்கு உரமாக மாற்றுகிறார்கள் மற்றும் நெகிழி போன்ற பொருட்களை மொத்தமாக எடுத்து மறுசுழற்சிக்கு அனுப்புகிறார்கள் இதனால் இவர்கள் அதிக அளவில் செடிகளையும் மரங்களையும் நட்டு இந்த இடத்தை ஒரு சிறு பூங்கா போன்று மாற்றியுள்ளார்கள் இதைத் தவிர்த்து இங்கு உள்ள சுவர்கள் அனைத்திற்கும் ஒரே நிரத்தில் வெள்ளை அடித்து அடித்து அதிலும் வண்ண வண்ண பூக்கள் மற்றும் பட்டாம்பூச்சி போன்ற ஓவியங்களையும் வரைந்துள்ளார்கள் இந்த சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துள்ளார்கள் இந்த சாலையில் அரசாங்கத்தினால் சாலை போட வருபவர்களை இவர்கள் திட்டத்தின்கீழ் சாலையை போட செய்ய வலியுறுத்துகிறார்கள் இது எதற்காக என்றால் இப்படி போடுவதன் மூலம் நீர் எதுவும் சாலையில் தேங்காமல் சரியான இடத்திற்கு சென்று விடும் இதனால் பல வருடங்கள் சாலைகள் நீடித்து நிலைக்கும் என்கிறார்கள் எனவே இது அனைத்தையும் மற்றா மக்களும் கடைபிடித்தால் நம் நகரம் மிக செழுமையான நகரமாக மாறும் என்று இந்த நிர்வாகத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி அவர்கள் கூறியுள்ளார். பசுமை / நீர் / மேலாண்மை / பாலசுப்பிரமணி / அழகு / பூங்கா / பள்ளி / சுவர் / ஓவியம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.