அழகான கல் சிறப்பங்களுக்கு பின் இருக்கும் கண்ணீர் கதை..!

Video Description

கண்ணன் சிற்ப கலைக்கூடம் நாம் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழிகளில் ஏராளமான சிற்பங்கள் இருக்கும் இடங்களை நம்மால் பார்க்க முடியும் ஆனால் நாம் ஒரு முறை கூட இந்த சிற்பங்கள் என்ன விலை என்று கூட கேட்டதில்லை இதற்கான காரணம் அதற்கான தேவை நம்மிடம் இல்லை என்பதுதான் ஆனால் இதற்கு இந்த கலைக்கான புரிதலை நம்மிடம் இல்லாதது தான் உண்மையான காரணம் பொதுவாகவே ஒரு சிற்பம் செய்வது என்பது எளிதான காரியமில்லை இதில் ஏகப்பட்ட பொறுமையும் திறமையும் தேவை இதை அனைத்தையும் கொண்டுதான் இவர்கள் சிற்பம் அமைக்கிறார்கள் சாதாரணமாக ஒரு ஓவியத்தை வரைபவர் ஏதாவது தவறு செய்து விட்டால் அவர் அந்த ஓவியத்தை கைவிட்டு வேறு ஒரு ஓவியத்தை வரையலாம் ஆனால் சிற்பம் என்பது ஏதாவது தவறு செய்து விட்டால் அந்த சிற்பம் விற்பனைக்கு செல்லாது அதுமட்டுமில்லாமல் அந்த செதுக்குவதற்காக வாங்கப்பட்ட கல் வீணாகிவிடும் இத்தகைய கடினமான தொழிலை பலரும் செய்து வருகிறார்கள் சுமார் இருபது வருடங்களாக இந்த கண்ணன் சிற்பக்கலை கூட்டத்தை நடத்தி வருகிறார் இந்த கடையின் உரிமையாளர் இப்போது விற்பனை குறைந்து வருகிறது ஏனென்றால் சிற்பத்திற்கு எடுக்கப்படும் கல்லின் விலை மிக அதிகமாக உள்ளது அது மட்டும் இல்லாமல் எந்தவொரு அரசாங்கமும் இதற்கான சரியான அனுமதி தந்தது இல்லை இவர்கள் இந்தக் கல் எடுத்து பயன்படுத்தலாம் என்ற அனுமதி தந்தார்கள் என்றால் இவர்கள் பிழைப்பு சற்று உயர்ந்திருக்கும் ஆனால் இவர்களுக்கு கிடைப்பது ஒன்று முதல் இரண்டு அடி கல்தான் பெரிய சிற்பம் செய்ய வேண்டும் என்றால் இவர்களுக்கு ஏழு அடி கல் தேவை ஆனால் இதன் விலை மிக அதிகம் அதுவும் பெரும்பாலான இடங்களில் இது கிடைப்பது இல்லை என்கிறார்கள் யாராவது சிற்பம் செய்யவேண்டுமென்று வந்தார்கள் என்றால் முன்பதிவு முறையில் இவர்கள் பதிவிடுவார்கள் ஆனால் இவர்களுக்கு சிற்பம் ஒரு மாதத்திலேயே வேண்டும் என்கிறார்கள் இந்த சிற்பத்தை செய்வதற்கான கல் கிடைப்பதே ஒரு மாதம் ஆகி விடுகிறது இதனால் நாங்கள் செய்யத் தொடங்குமுன் எங்கள் வியாபாரம் சரிந்து விடுகிறது என்று அனைவரின் கவலையை கூறியுள்ளார் சிற்பக் கலைக் கல்லூரிகள் இருக்கும் நிலையில் அங்கு பயில்பவர்கள் ஐந்து விதமான கலையை பயில்கிறார்கள் ஒன்று கற்களினால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் மரங்களினால் செய்யப்படும் பொருட்கள் அடுத்து சிமெண்ட் கலவையால் செய்யப்படும் சிற்பங்கள் பின்பு வண்ணங்கள் மூலம் வரையப்படும் சிற்பங்கள் ஆனால் கற்களால் செய்யப்படும் கலையை குறைந்த அளவே பயின்று அதற்கேற்ற தொழிலில் ஈடுபடுகிறார்கள் மீதி இருக்கும் அனைவரும் மற்ற கலையை பின்தொடர்ந்து சென்று விடுகிறார்கள் எனவே இந்த கலை அழியாமல் காக்க வேண்டுமென்றால் அனைவரும் இது போன்ற கலை உள்ள படிப்பை படிக்க வேண்டும் இல்லையெனில் இதுபோன்ற சிற்பங்கள் செய்யும் இடங்களுக்கு சென்று கற்றுவரலாம் என்கிறார். சிற்பங்கள் / கலை / ஓவியம் / செதுக்குதல் / பாரம்பரியம் / அழியும் / கற்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.