கர்ப்பிணிகள் தூங்குமுன் செய்ய வேண்டியவை..!

Video Description

கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டியவை பெண்களுக்கு மிக முக்கியமான காலம் எதுவென்றால் அவர்களின் கர்ப்பக்காலம் தான் இந்த சமயங்களில் அவர்கள் மிக ஆரோக்கியமாக இருக்கவேண்டும் அதை தவிர்த்து தங்களையே மிக பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் இவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் இவர் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் அதன் தாக்கத்தையும் வெளிப்படுத்தும் இதனால் கர்ப்பிணி பெண்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் இவர்களுக்கு ஊட்டச்சத்து எப்போதும் அதிகமாக இருக்க வேண்டும் இதனால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஏதாவது உணவை உட்கொண்டு இருக்க வேண்டும் இதை தவிர்த்து இவர்கள் நன்கு உறங்க வேண்டும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது இவர்கள் உறங்கினால் தான் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் படுக்கும்போது எப்போதும் ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும் அதுவும் தனது இடது பக்கமாக படுப்பது மிகவும் நல்லது இவர்கள் மல்லார்ந்து படுத்தார்கள் என்றால் அது இவர்களுக்கே மூச்சுத்திணறல் ஏற்பட வழிவகுக்கும் அது மட்டுமில்லாமல் ரத்தக் குழாய்களில் அழுத்தம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது இதனால் நமது ரத்த ஓட்டம் பாதிப்படைகிறது இவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது வயிறு பெரிதாக ஆவதற்கு முன் சில பெண்கள் இதுபோன்ற நிலையில் படுகிறார்கள் இதை தவிர்ப்பது மிகவும் நல்லது சில கர்ப்பிணி பெண்களுக்கு இரவு நேரங்களில் தூக்கம் தாமதமாக வரும் இந்த சமயங்களில் அவர்கள் ஒரு சிறிய நடை பயிற்சி செய்து விட்டு மீண்டும் வந்து படுத்தால் தூக்கம் வேகமாக வந்துவிடும் கர்ப்பிணி பெண்கள் இரவில் வெதுவெதுப்பான நீரில் குளித்து விட்டு தூங்கச் சென்றால் அவர்கள் மனம் அமைதியாகும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல இது ஒரு நல்ல வழியாக இருக்கும் இந்த சமயங்களில் இவர்கள் புரண்டு படுத்தார்கள் என்றால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கொடி சுற்றி விடும் என்று பயமுறுத்துவார்கள் ஆனால் அது அந்த அளவு உண்மை இல்லை தூங்குவதற்கு முன் தலை பக்கத்தில் எந்த ஒரு இயந்திர பொருட்களை வைத்து உறங்கக்கூடாது இவர்கள் கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கினால் இவர்களுக்கு ஏற்படும் வலிகள் குறைவாக வாய்ப்புகள் உள்ளது மிகவும் இறுக்கமான உடையை அணிய கூடாது ஏனென்றால் இந்த சமயங்களில் மார்பகம் மற்றும் இடுப்பு பகுதிகள் விரிவடையும் அதற்கு நாம் பெரிதாக உள்ள ஆடையை பயன்படுத்த வேண்டும் இவர்கள் இரவு உணவு அருந்திய பின்பு உடனே படுக்க செல்லக்கூடாது இப்படி செய்தால் இவர்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே இந்த சமயங்களில் இவர்கள் அனைத்தையும் சரியாக கடைப்பிடித்து ஆரோக்கியமான ஒருவழியில் குழந்தை பெற்றெடுப்பது தான் மிகவும் நல்லது. கர்ப்பிணி / பெண்கள் / ஆரோக்கியம் / வலிமை / உடல் / ஊட்டச்சத்து / உணவு / தூக்கம் / உறக்கம் / ஆடை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.