மஹாபாரத காவியத்தில் பாண்டவர்களின் வியக்கவைக்கும் திறன்கள்..!

Video Description

பாண்டவர்களின் சிறப்பு மகாபாரதம் என்று எடுத்துக்கொண்டாலே அதில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கின்றன இதில் கூறப்படும் அனைத்தும் நம்முடைய நல்லொழுக்கத்திற்காகவே சொல்லப்பட்டிருக்கும் இப்படி இந்த மகாபாரதத்தில் மிக முக்கியமான ஐந்து சகோதரர்கள் யார் என்றால் பஞ்சபாண்டவர்கள் அர்ஜுனன், நகுலன், தருமர், பீமன், சகாதேவன் அவர்கள் இவர்கள் சகோதரர்களாக இருந்தாலும் இவர்களின் குணம் வெவ்வேறாகவே இருக்கின்றன அதில் முதலில் தர்மர் என்பவர் பெயரில் இருப்பதுபோன்ற தர்மம் குணம் உடையவர் இவர் பொய் சொல்லாமல் நேர்மையாகவும் நீதியை நிலைநாட்டுவதற்காக பாடுபடுபவர் ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் தர்மரிடம் ஒன்றை மரைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் கடவுளாக இருந்தாலும் அவருக்காக பொய் சொல்ல மாட்டேன் என்று தூய்மையாக இருந்தவர்தான் தர்மர் அடுத்து பீமர், பீமர் என்றாலே தங்களுக்குத் தெரியும் வலிமையானவர் என்பது அர்த்தம் இவரால் ஆயிரம் யானைகளை கூட தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு வலிமை படைத்தவர் என்கிறார்கள் அடுத்து அர்ஜுனன், அர்ஜுனன் வில்வித்தைகளில் சிறப்பாக விளங்கியவர் இவரிடம் வில்லின் மூலமாக நேரடியாக சண்டை போடுவது என்பது நமக்கு நாமே மரணம் குழி தோன்றுவதற்கு சமமாகும் பிறகு நகுலன் இவர் ஒருவிதமான பொறுமைசாலி இவர் எதை செய்தாலும் சிந்தித்து செய்யக்கூடியவர் நகுலன் கலை மற்றும் அறிவியலில் திறமை படைத்தவர் இவர் சிற்பங்கள் ஓவியங்கள் போன்றவற்றை வரையும் திறமை படைத்தவர் ஆவார் கடைசியாக சகாதேவன் இவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறக்கூடிய சக்திகள் இருக்கின்றன ஏனென்றால் இவர் ஜோதிடத்தில் அதிகளவு ஆர்வம் உடையவர் என்பதால் இவரால் எதிர்காலத்தை முன்கூட்டியே கூறமுடிகிறது இதைத் தவிர்த்து இவர் வாள் சண்டையிலும் திறமை படைத்தவர். அர்ஜுனன் / பீமன் / நகுலன் / தர்மர் / சகாதேவன் / பஞ்சபாண்டவர்கள் / திறமை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.