அரசியல் செய்யாமல் மன்மோகன் பேச்சை கேளுங்கள்.. சிவசேனா அதிரடி..!

Video Description

நாட்டின் நலனுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சை மத்திய அரசு கேட்க வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் குறித்து கவலை தெரிவித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டார். அதில், இந்திய பொருளாதாரம், மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது எனவும், மத்திய ஆட்சியாளர்கள், இனியாவது, பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்திருந்தார். மன்மோகனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி, தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. இது பிஜேபி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகன் சிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எச்சரித்தது போலவே, தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக நாட்டின் நிதி மற்றும் பொருளாதார துறைகளில் தொடர்பில் இருக்கும் அவருக்கு, நாட்டின் பொருளாதாரம் குறித்து பேச முழு உரிமை உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த பல திட்டங்கள் படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் வெற்றி, குதிரை பேரத்தில் மட்டும் பா.ஜ.க கவனம் செலுத்துவதை விடுத்து, பொருளாதாரத்தில் கவனத்தை குவிக்க வேண்டும். பொருளாதார சூழலை நன்கு அறிந்து, மன்மோகனின், எச்சரிக்கையையும், அறிவுரைகளையும், மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.