மிக தாமதமாக இரவு உணவு உட்கொள்பவரா நீங்கள்?

Video Description

Early to bed Early to rise என்ற வாத்தியத்தின் படி நடந்தால் நமது வாழ்க்கை முறை சிறப்பான முறையில் அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் இரவு உணவு என்பது 10 மணிக்கு மேல் என்பது எல்லோருக்கும் ஆபத்தான பழக்கம் என்று சொன்னால் அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை? இயந்திரமயமான வாழ்க்கையில் இரவு உணவை தாமதமாக உட்கொள்வதால் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அன்றாட செயல்களை எல்லாம் முடித்துவிட்டு உணவு அருந்தும்போது நேரம் மிக அதிகமாவதால் நமக்கு அந்த உணவினால் எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை என்று பல உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து இந்தத் தலைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகவும் பொருத்தமான உண்மையாகும் இரவு உணவை 8 மணிக்கு முன் முடித்துவிட வேண்டும் அதுதான் சரியான நேரம் அதற்கு மேல் தாமதமாக உண்ணும் போது வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பு உண்டாகும் இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் சாப்பிட்ட உணவு எதுக்களித்து மேலே வரும் பல மணி நேரம் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி விடும் குரலில் மேலும் இரவில் தாமதமாக உண்ணும் வழக்கத்தை நாம் மேற்கொண்டால் இயல்பை விட அதிகமான அளவு சாப்பிடுவோம் எனவே உடலில் கலோரி அதிகரித்து மிக விரைவில் ஆண்களுக்கு தொப்பை போடும் தூங்கும் நேரம் குறைந்தால் உடல் எடை அதிகரிக்கும் இரவு நேரங்களில் நேரங்கழித்து சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் கூட குறைக்க முடியாது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள் இரவில் தாமதமாக சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவர்கள் வலியுறுத்து கிறார்கள் என்றால் உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் வளர்சிதை மாற்றங்கள் குறையும் ரத்தத்தில் டிரைகிளிசரைடு என்ற கெட்ட கொழுப்பின் அளவும் அதிகமாகும் காலை மதியம் என எந்த நேரத்து உணவாக இருந்தாலும் உரிய நேரத்தில் சாப்பிட்டால் தான் நமக்கு உரிய பலன் கிடைக்கும் இதனால் எந்த வகை உணவை எந்த நேரத்தில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அதனைப் பின்பற்றும் உறங்கும் நேரம் சரியான சுழற்சி நடைபெறும் இரவில் சீக்கிரம் சாப்பிடு வதால் செரிமான பிரச்சனை உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படாது உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என பல மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன முக்கியமாக தூங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடுவது மிகவும் நல்லது இதன் மூலம் மாரடைப்பு போன்ற இதய தொடர்பான பிரச்சனைகளை நாம் கட்டுப்படுத்தலாம் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும் இரவு நேரங்களில் நேரம் கழித்து சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் களைப்பு காரணமாக உடனே படுத்து விடுவார்கள் அவ்வாறு செய்வதால் செரிமான பிரச்சனை போதுமான செரிமானமும் கிடைக்காது மிகவும் குறைவாக நடைபெறும் இதனால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். இரவு உணவு தாமதமாகும் போது காலை உணவு தவிர்க்கப்படும் இதனால் தலைவலி வரும் உடலில் கொழுப்பு தங்கி விடும். இரவு படுக்கச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பாக நாம் உணவு உண்டு விட்டு முடிந்தால் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது ஆரோக்கியம். இரவு நேரம் அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்த்துவிடுங்கள் மிகவும் நல்லது எளிய மிக விரைவில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது. பால் பழங்களை குறிப்பாக வாழைப்பழம் உண்பதும் மிக நல்லது. மேற்கூறிய இந்த முறைகளைப் பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு உங்களுடைய மாற்றம் நன்றாக தெரியும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.