சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா?

Video Description

சிறுநீரை அதிகமாக அடக்கும் போது பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் ஒருவித அசௌகரியத்தை உணரக் கூடும் மேலும் அடுத்து சிறு நீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும் . சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். அதுபோல கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்பபை சிறுநீர்பையை முட்டுவதால் அவர்களுக்கும் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். சிறுநீரை அடக்குவதால் இடுப்பு மடி தசைகள் பலவீனம் அடைந்து அதனால் உடல் எடையை இழக்க நேரிடும் நீண்டநேரம் அடக்கிய சிறுநீர் வெளியேறும் போது அதிக வலியை ஏற்படுத்தும். அதன்பின் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால் கவனச்சிதறல் ஏற்படும் . கவனசிதறல் ஆபத்து ஏற்பட்டால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. உதாரணமாக பைக்கில் பயணம் மேற்கொள்ளும் போது வந்து அதனை நீண்ட நேரமாக அடக்கி கொண்டே பைக் ஓட்டினால் சரியாக வண்டி ஓட்ட முடியாமல் போய் பின் அது விபத்துக்கு வழிவகுக்கும். வெகுநேரம் சிறுநீரை அடக்கினால் சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் பையில் தீவிர தொற்றுகள் ஏற்படக்கூடும். மேலும் இப் பழக்கம் நீடித்தால் சிறுநீரகப் பையில் அழுத்தம் அதிகரித்து தாங்கும் திறன் இழக்கப்படும். இதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறு நீரில் உள்ள நச்சுக்களை பரவ செய்து உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். சிறுநீரகத்தை பாதிக்கும். இது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் நமது சிறுநீரகப்பை நான் ஊரில் இருந்து 500 மில்லி லிட்டர் அளவிலான சிறுநீரை மட்டுமே தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய தன்மை உள்ளது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.