அசுரன் பட ட்ரைலரின் விமர்சனம்..என்ன எதிர்பாக்கலாம் இந்த படத்தில்?

Video Description

அசுரன் ட்ரெய்லரின் விமர்சனம் “தனுஷ்’ மற்றும் ‘வெற்றிமாறன்’ கூட்டணியில் வரவிருக்கும் படம் அசுரன் இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ‘வெற்றிமாறன்’ இதன் தயாரிப்பு ‘கலைப்புலி தாணு’ அவர்கள். வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ‘ஜிவி பிரகாஷ்குமார்” இசையமைத்துள்ளார். ‘தனுஷ்’ மற்றும் ‘வெற்றிமாறன்’ இணைந்தால் படத்தின் கதைகளம் வேறு மாதிரியாக இருக்கும். தத்துபமான முறையில் படமெடுப்பது இவர்கள் வல்லவர்கள். இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த படத்தின் டிரைலர் ஒரு உதாரணமாகும் அதில் சில குறிப்புகள் இதோ..திருநெல்வேலியை சேர்ந்த ஒரு விவசாயின் கதையை பற்றிய திரைப்படம், இந்தப் படத்தில் ‘தனுஷ்’ இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் முதல் வேடம் 48 வயது உள்ள ஆண்மகன் ஆகவும் இரண்டாவது 20 வயது இளைஞர் ஆகவும் நடித்துள்ளார். 48 வயது கதாபாத்திரத்தை முதன்முறையாக தனுஷ் நடிக்கிறார் இது அவரின் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் மண் மணம் மாறாமல் எடுக்கப்பட்ட படம் “ஆடுகளம்” அதேபோன்று திருநெல்வேலியை சார்ந்து எடுக்கப்பட்ட இந்தப்படம் வேறுவிதமாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த படத்தை பற்றி முழு விமர்சனமும் தெரிந்து கொள்ள அனைவரும் அக்டோபர் 4 வரை காத்திருக்க வேண்டும். 48 வயது / தனுஷ் / வெற்றிமாறன் / கலைப்புலி தாணு / ஜிவி பிரகாஷ்குமார்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.