வெயிலால் ஏற்படும் கருமையை நீக்க எளிய வழி

Video Description

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகும். எத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம் கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் முகம் கருமை அடையும். அப்படி கருமையாக மாறி போன உங்கள் முகத்தையும் சருமத்தையும் வெள்ளையாக ஆசையா அப்படி என்றால் இந்த வீடியோவில் நாங்கள் சொல்லக்கூடிய டிப்ஸை தொடர்ந்து பாருங்கள். வாழைப்பழத்தை மசித்து அதில் பால் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும் .அப்படி தினமும் 2 முறை செய்து வந்தால் இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை கருமை குறைந்து இருப்பதையும் நீங்கள் காணலாம். ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து தினமும் இரவு உறங்கும் முன் முகத்தில் நன்றாக தடவி காலையில் எழுந்து கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும். கற்றாழை ஜெல் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால் முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் வெள்ளையாக அழகாகவும் மாறும் சூரியகாந்தி விதைகளை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரைத்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும் இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் சருமம் வெள்ளையாக காட்சிதரும். மாம்பழ தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் சூரியக்கதிர்களால் ஏற்படும் கருமையான சருமம் வெள்ளையாக மாறி மின்னும். தேனில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து தடவி 15 நிமிடம் முகத்தில் ஊற வைத்து கழுவினால் முகம் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் காணப்படும் இந்த முறையை தொடர்ந்து அதிகரித்திருப்பதைக் காணலாம். தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும். முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும் தண்ணீர் அதிகமாக குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவுடன் காணப்படும் குறைந்த அளவு 9 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும் அதேபோல் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும் இதன் மூலம் கருவளையங்கள் நீங்கி முகம் இயற்கையான அழகுடன் காணப்படும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.