உச்சந்தலை முடிஉதிர்வுக்கு முக்கிய காரணங்கள்..!

Video Description

இன்றைய இளைய தலைமுறையினருக்கு இளமையிலேயே தலையில் வழுக்கை விழுவது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 20 வயதிலேயே ஆண்களுக்கு முடி உதிர்வு அதிகரித்து தலையில் வழுக்கை விழ ஆரம்பிக்கிறது . இப்படி வழுக்கை விழ ஆரம்பித்து தற்போது பல ஆண்களுக்கு திருமணம் என வரும்போது அதுவே ஒரு பிரச்சினையாகவும் உள்ளது. உச்சந்தலை முடி உதிர்வுக்கு என்னென்ன காரணம் என்பதை பற்றி இந்த வீடியோவில் நீங்கள் விரிவாக பார்க்கலாம். வழுக்கை ஏற்படுவதற்கு அதாவது உச்சந்தலையில் உள்ள முடி உதிர்வதற்கு பாரம்பரியமும் ஒரு காரணம் .அதிலும் இன்றைய உலகில் மன அழுத்தம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தீய பழக்கவழக்கங்களால் முடி உதிர்வு அதிகரிப்பதுடன் அந்த இடத்தில் முடி வளராமல் வழுக்கை ஏற்படுகிறது. மேலும் இந்த நிலை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தற்போது காணப்படுவது மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் விசயமாகும். மன அழுத்தம் அதிகரிப்பதால் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் ஒன்றுதான் இந்த உச்சந்தலையில் உள்ள முடி உதிர்வது மன அழுத்தத்தால் பாதிக்கப் படுவதால் மன அழுத்தத்தைத் தூண்டும் சில காரணிகள் தலைமுடி உதிர்வுக்கு மிக முக்கியமான காரணியாக உள்ளது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். மோசமான உணவு பழக்க வழக்கத்தால் கூட இந்த முடிவுதிர்வுகள் ஏற்படலாம் குறிப்பாக புரோட்டீன் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் குறைபாட்டால் மயிர்க்கால்களில் சத்துக்கள் கிடைக்காமல் போய் முடி உதிர்தல் அதிகரித்து நாளடைவில் வழுக்கை ஏற்பட காரணமாக உள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் அல்லது நோய்களால் ஆண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் முடி உதிர்வை அதிகரிக்கும். டி ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோனின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து விட்டால் அந்த இடத்தில் முடி விரைவில் உதிர்ந்து வழுக்கை ஆகிவிடும். இரவில் நிம்மதியாக தூங்காமல் இருக்கும் ஆண்களுக்கும் முடிஉதிர்தல் அதிகரிக்கும். கெல்மேட் அணியும் ஆண்களுக்கும் முடி உதிர்தல் மிக விரைவாக ஏற்படும். இந்த உச்சந்தலை முடி உதிர்வை தடுக்க வேண்டும் என நினைக்கும் ஆண்கள் நல்ல ஊட்டச் சத்துக்கள் உள்ள உணவுகளை உணவில் புரோட்டீன் வைட்டமின் பி3 பி5 மற்றும் ஈ, ஜிங்க், இரும்புச்சத்து ,மக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்களை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் இரவில் 7 முதல் 8 மணி நேரம் உறங்கவேண்டும். தண்ணீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அருந்த வேண்டும். அவ்வாறு செய்வதால் மயிர்கால்களை வறட்சியடையாமல் ஆரோக்கியமாக இருக்கும். முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகளான பால் ,பாதாம் ,பசலைக் கீரை, ப்ராக்கோலி, நவதானியங்கள் ,மீன் சோயா ,முட்டை ,கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் முடி வளர்ச்சி ஏற்படும். முடி உதிர்தல் தடைபடும். தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வந்தால் முடி உதிரும் ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் தூண்டுதலைத் தடுக்கும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.