எல்லா இறை வழிபாட்டிலும் வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது ஏன்...?

Video Description

எல்லாவிதமான இறை வழிபாட்டுடன் வெற்றிலையின் பங்கு மிக முக்கியமாக உள்ளது .ஏனென்றால் வெற்றிலை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்கள் .இதுபோன்று லக்ஷ்மிகரம் பொருந்தியதாக இருக்கவேண்டிய வெற்றிலையில் முக்கியமாக நாம் பயன்படுத்துகிறோம். பண்டிகைகள், விசேஷம் ,விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணிக்கும் தன்மையை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. சுபநிகழ்ச்சிகளில் விருந்துக்குப் பின் வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்த நெய்வேத்தியம் முற்றுப் பெறாது. வெற்றிலை பாக்கு வாடியிருந்தால் அவை வீட்டுக்கு நல்லதல்ல என்ற நம்பிக்கை உள்ளது .வெற்றிலை பாக்கை எப்போதும் வலது கையால்தான் வாங்க வேண்டும். ஏனெனில் இவை மகிமை மிக்கது. மங்களகரமானது .வெற்றிலை வெற்றியின் அடையாளம். சளியை நீக்கும் அருமருந்தாக திகழ்கிறது. கோவில்களில் கடவுள்களுக்கு எத்தனை பலகாரங்கள் படைத்து வழிபட்டாலும் வெற்றிலையை வைத்து இறுதி யாக வழிபட வேண்டும். 12 ராசிக்காரர்களும் வெற்றியின் மூலம் பரிகாரம் செய்ய கவலைகள் தீரும் என்பது ஜோதிட நம்பிக்கை. வெற்றிலையை வைத்து வழிபட்டால் அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்கும் குறிப்பாக செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.