அனைத்து தோஷங்களையும் நீக்கும் கருட ஜெயந்தி....

Video Description

கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூன்யம், நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும். தமிழகத்தில் இருக்கும் பல்வேறு வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்படும். கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர். கருடனைத் தரிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் இந்த பலன்களை பெறலாம் ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும். திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும். செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும். புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும். வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும் சனி கருட தரிசனம் - நற்கதி அடையலாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.