வரலட்சுமி விரதம் மேற்கொள்வதால் என்ன நன்மை கிடைக்கும்?

Video Description

வரசெல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை அனுஷ்டிக்கும் நாள்தான் வரலட்சுமி விரதம். அஷ்டலட்சுமியரின் பிரதியாக இருந்து கேட்கும் வரங்களை அருள்பவளே வரலட்சுமி. வருடந்தோறும் ஆடி அமாவாசைக்குப் பிறகு, பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமைதான் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் நாள். பெரும்பாலும் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்திலேயே வரும். கன்னிப்பெண்கள் இந்த வரலட்சுமி விரதத்திய மேற்கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானமும், ஆரோக்கியமும் கிடைக்கும். விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும். வீட்டில் செல்வம் நிறையும் என்பது ஐதீகம். பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் பெருகும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.