வண்டி விலையே ரூ.15,000 தான், ஆனா அபராதம் ரூ.23,000

Video Description

வண்டியின் விலை 15 ஆயிரம் அதற்கு கட்டவேண்டிய அபராதம் 23 ஆயிரம் தமிழகத்தில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது இந்த சட்டத்திருத்தத்தை போக்குவரத்து துறை அமைச்சகத்தில் ஒப்புதலோடு மத்திய அரசு அறிவித்திருந்தது இதன்படி சரியான ஆவணம் இன்றி பயணிப்பது, குடிபோதையில் வாகனத்தை இயக்குவதை, ஓட்டுநர் உரிமம் இன்றி வண்டி ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் இருப்பது போன்ற குற்ற நடவடிக்கைகளுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல இடத்தில் வசூல் வேட்டை நடத்தப்பட்டாலும் ஒரு சுவாரசியமான சம்பவம் ஹரியானா மாநிலத்தின் குர்கான் நகரத்தில் நடந்துள்ளது. தினேஷ் மதன் என்பவரிடம் போக்குவரத்து காவலர்கள் பரிசோதனை செய்து உள்ளார்கள் அப்போது அவரிடம் போதுமான ஆவணங்கள் இல்லாததால் அவருக்கு 23 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்கள் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மதன், என் வாகனத்தின் மதிப்பு வெறும் 15 ஆயிரம் ரூபாய் தான் இதற்கு 23 ஆயிரம் அபராதம..? என்ற வருத்தத்தில் உள்ளார் அதுமட்டுமல்லாமல் அவரின் வாகனத்தை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளார்கள். இனிமேல் இதுபோன்ற தவறு ஏதும் செய்ய மாட்டேன் என்ற உறுதியில் உள்ளார் மதன். புதிய மோட்டார் வாகன சட்டம் / அதிகாரிகள் பறிமுதல் / வசூல் வேட்டை / ஹரியானா மாநிலத்தின் குர்கான் நகரத்தில் நடந்துள்ளது

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.