எக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க..!

Video Description

அழகு என்பது அனைவரும் விரும்பும் ஓர் விஷயம். அத்தகைய அழகினை இயற்கை முறையில் பேணுவதே மிகவும் சிறப்பான ஒன்று. பொதுவாகவே பலரும் இந்த சோப்பை அதாவது உடம்பில் பயன்படுத்தக்கூடிய சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவார்கள் நம்முடைய உடலுக்கு பயன்படுத்தக்கூடிய சோப்பை முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நம்முடைய முக சருமமானது அளவில் 5.4ph முதல் 5.9 ph என்ற அளவில் இருக்கிறது. ஆனால் இந்த சோப்பின் அளவானது ஒன்றிலிருந்து பத்து ph வரை இருக்கும் .நீங்கள் இந்த சோப்பை உங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது உங்களுடைய முகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .முக்கியமாக அரிப்பு எரிச்சல் அலர்ஜி வறண்ட சருமம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்களாக இருந்தால் கண்டிப்பாக சருமத்திற்கு பயன்படுத்த கூடிய சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அது போல பலரும் பாடி லோசனை முகத்திற்கு பயன்படுத்துவார்கள் குளியலறைக்கு சென்று குளிக்கும் அவசரத்தில் பாடி லோஷனை அப்படியே முகத்திலும் பயன்படுத்துவார்கள். இந்த பாடி லோசன் என்பது கெட்டியான திரவ சோப். இதில் ஏராளமான கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதை நீங்கள் உங்கள் முகத்தில் தேய்க்கும் பொழுது இந்த கெமிக்கல்கள் உங்களுடைய முகத்திற்கு மிகப்பெரிய பிரச்சினை ஏற்படுத்தும். முக்கியமாக முகத்திற்கு நீங்கள் இந்த பாடி லோஷனை பயன்படுத்தும் பொழுது இது சருமத் துளைகளை அடைத்து வேறு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆகையால் பாடி லோஷனை உங்களுடைய முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள் வெந்நீர் குளியல் தற்பொழுது குளிர்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது .பலரும் வெந்நீர் குளியல் தான் மிகவும் விரும்புவார்கள் இந்த வெந்நீர் குளியல் அது நம்முடைய உடலுக்கு இதமாக இருக்கும். ஆனால் இது சருமத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று .நீங்கள் சூடான நீரை கொண்டு முகத்தை கழுவும் போது அல்லது வெந்நீர் கொண்டு குளிக்கும் பொழுது உங்களுடைய முகத்தில் உள்ள ஈரப்பதம் அது மிகப்பெரிய அளவில் குறையும். இதனால் சருமத் துளைகள் அடைபடும் அதிக அளவில் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படும். அதனால் சூடான நீர் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. அப்படியெனில் நீங்கள் குளிக்க வேண்டும் என்றால் முகத்திற்கு மட்டும் வெண்ணிற பயன்படுத்தாமல் சாதாரண தண்ணீர் பயன்படுத்துவது நல்லது .ஷாம்பு குளிக்கும் போது தலைக்கு ஷாம்பு போடுங்கள் ஷாம்பு போட்டு விட்டு அப்படியே தண்ணீரை ஊற்றும் பொழுது அந்த அவரது முகத்தில் வழியும் இப்படி முகத்தில் வடிவது கூட முகத்தில் மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் நீங்கள் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கும் பொழுது முகத்தில் படாத அளவு உங்கள் தலையில் போடப்பட்டிருக்கும் செம்புவே சுத்தம் செய்வது நல்லது. இந்த ஷாம்பு நம்முடைய சருமத்தில் படும்போது வறட்சி தோல் உரிதல் போன்றவை ஏற்படும். அதுபோல பயன்படுத்தக்கூடிய ஷாம்பு வில் ஹைட்ரஜன் பெராக்ஸிதே பயன்படுத்தப்படுகிறது இந்த ஹைட்ரஜன் பெராக்சைடு நம்முடைய சருமத்திற்கு மிகவும் ஒரு எதிரி . இந்த ஹைட்ரஜன் பெராக்சைடு உங்களுடைய முகத்தில் பட்டால் அது சருமத்தில் உள்ள செல்கள் உருவாக்கத்தை தடுத்து சருமத்தை அதிக அளவில் பாதிப்படைய செய்கிறது. ஆகையால் நீங்கள் தலைக்கு டை அடிக்கும் பொழுது உங்களுடைய முகத்தில் படாதவாறு கவனமாக இருக்கவேண்டியது அவசியம். முகத்தில் உள்ள வடுக்கள் மற்றும் பருக்கள் மீது toothpaste யை தடவினால் அது உடனடியாக சரியாகிவிடும் என பலரும் நினைத்து இந்த ஒரு தப்பை செய்கிறார்கள் உண்மையில் இந்த paste ல் கலந்து உள்ள கெமிக்கல்கள் சரும எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் இந்த paste முதலில் பயன்படுத்தும் பொழுது முகப்பருக்கள் குறைவது போல் இருக்கும் .இதனால் தொடர்ந்து இதை பலரும் முயற்சிப்பார்கள் எக்காரணத்தை கொண்டும் உங்களுடைய முகத்திற்கு toothpaste பயன்படுத்தாதீர்கள் நீங்கள் பயன்படுத்தும் பொழுது முதலில் உங்களுக்கு மிருதுவான சருமத்தை கொடுப்பது போல் இருந்தாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சல் மற்றும் சரும அலர்ஜியை ஏற்படுத்தும். ஆகையால் இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு மேலே சொன்ன இந்தப் பொருள்கள் படாதவாறு பார்த்து கொண்டால் உங்களுடைய சரும அழகை மேம்படுத்தும். இந்த வீடியோ பார்த்தபின் எக்காரணம் கொண்டும் மேலே சொன்ன பொருட்களை உங்கள் முகத்திற்கு போடமாட்டார்கள் தானே.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.