நிலவேம்பு குடிநீர் செய்முறையும் அதன் பயன்களும்..!

Video Description

காய்ச்சல் வந்தால் இன்று பலரும் தேடி செல்வது நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக இந்த நிலவேம்பு கசாயம் விளங்குகிறது இதை நாம் வீட்டிலேயே மிக எளிதாகவும் சுத்தமாகவும் தயாரிப்பது மிகவும் சிறந்தது நோய் பல தீர்க்கும் நிலவேம்பு குடிநீர் தயாரிப்பது எப்படி என்று சித்த மருத்துவம் கூறும் குறிப்புகளைக் காண்போம் இந்த வீடியோவில். நிலவேம்பு கசாயம் தயாரிக்க தேவையான பொருட்கள் நிலவேம்பு சமூலம் 10 கிராம் சுக்கு 10 கிராம் மிளகு 10 கிராம் சந்தனத் தூள் 10 கிராம் கோரைக்கிழங்கு 10 கிராம் வெட்டிவேர் 10 கிராம் பேய்புடல் பற்பாடகம் பத்துகிராம் விலாமிச்சம் வேர். மேலே குறிப்பிடப்பட்ட பல பொருட்களை எடுத்து சுத்தம் செய்து கொண்டு அவற்றை நன்கு இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும் அதன் பிறகு 800 மில்லி லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த நீரில் 25 கிராம் பொடியை கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் நீரானது 800 மில்லி யில் இருந்து 150 மில்லி எனக்கு உருகும் அளவு நன்கு கொதிக்க வைத்து பின் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். குளிர் காய்ச்சல் டெங்கு போன்ற ஜுரம் வரும் சமயத்தில் காலை மாலை இருவேளையும் 25 மில்லி நிலவேம்பு கஷாயத்தை குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் காய்ச்சலும் பறந்தோடும் இது உடலில் உள்ள ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது இல்லாத சமயங்களில் வாரத்திற்கு ஒரு முறை இதை அருந்தலாம் ஆனால் தினமும் அருந்தக்கூடாது. நிலவேம்பு கஷாயத்தை காய்ச்சிய மூன்று மணி நேரத்துக்குள் பருகவேண்டும் இளம் சூட்டில் பருகுவது மிகவும் நல்லது நேரம் செல்ல செல்ல கட்டாயத்தின் வீரியம் குறைய தொடங்கும் காய்ச்சல் சமயத்தில் பெரியவர்கள் இதை ஒரு நாளைக்கு 10 முதல் 50 மிலி வரை பருக லாம் 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 15 முதல் 30 மில்லி வரை பருகலாம். நிலவேம்பு கசாயத்தை குடிப்பதால் டெங்கு ஜுரம் சரியாகும். யாருக்கு ஆங்கிலத்தில் மருந்துகள் கிடையாது ஆனால் நம்ம நம் சித்த மருத்துவத்தில் இருக்கும் இந்த நிலவேம்பு இலையை பொடி செய்து கசாயமாக காய்ச்சி கொடுப்பதின் மூலம் டெங்கு ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நீங்குவதோடு உடலில் ஏற்பட்டிருக்கும் பலவீனங்கள் நீங்கி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி மீண்டும் பழைய ஆரோக்கியத்தை இந்த நிலவேம்பு கொடுக்கிறது. சாதாரண உரங்களையும் இந்த நிலவேம்பு கசாயம் குணப்படுத்துகிறது நீண்ட நாட்களாக சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசி உணர்வு குறைந்து காணப்படும் இவர்களின் பசியை தூண்டவும் இந்த நிலவேம்பு கஷாயம் பயன்படுகிறது. இது கல்லீரலின் காணப்படும் குறைபாடுகளை நீக்கி சுவாச நோய்களையும் தீர்க்கிறது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.