தலைமுடி அடர்த்தியாக வளருவதற்கான இயற்கை குறிப்புகள்....!!

Video Description

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல் முடி செழித்து வளர வாரம் ஒருமுறை எண்ணெயைத் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்கு வளரும் .செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். கறிவேப்பிலை சின்ன வெங்காயம் 4 இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான அடர்த்தியான வளரும். கடுக்காய் செம்பருத்திப்பூ நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து அடர்த்தியாக வளரும். ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி தான்றிக்காய் பொடி மருதாணி பொடி கறிவேப்பிலை பொடி கரிசலாங்கண்ணி பொடி வெட்டிவேர் ரோஜா இதழ்கள் சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும் இந்த கலவையை 4 நாளுக்கு ஒருமுறை வெயிலில் வைக்க வேண்டும். பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும். முடி உதிர்தல் கட்டுப்பாட்டுக்குள் வரும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை வேப்பிலை ரோஜா இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி உதிர்வது குறைவதுடன் அடர்ந்த கூந்தலும் கிடைக்கும். அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினாலும் முடி உதிரும் செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்த பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும் போது கூந்தல் அடர்த்தியாக வளரும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.