தமிழகம் வருகிறது 16 நூற்றாண்டில் செய்யப்பட்ட நடராஜர் சிலை.!

Video Description

பதினாறாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட நடராஜர் சிலை தமிழகம் வருகிறது. சிட்னி, ஆஸ்திரேலியாவில் இருந்த நடராஜர் சிலை விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இது 16ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சிலையாகும் தமிழக கோவில்களுக்கு சொந்தமான பாரம்பரியமிக்க பலவகை சிலைகள் காணாமல் போயிருந்தன, இதை மீட்கும் முயற்சியில் தமிழகத்தை சேர்ந்த பொன்மாணிக்கவேல் அவர்கள் சிறப்பு படையை அமைத்து விசாரித்து வருகிறார். இந்த விசாரணையில் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியத்தில் நடராஜர் சிலை இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள். 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து ஒரு தனியார் நிறுவனம் வாங்கியது இதை கண்டுபிடித்த காவல் அதிகாரி கார்த்திகேயன் அவர்கள் ஆஸ்திரேலியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இந்த சிலை தமிழகத்திற்கு தான் சொந்தமானவை என்பதற்கான சான்றிதழ்களை வழங்கியுள்ளார் இதனால் ஆஸ்திரேலிய அரசு இதை தமிழகத்திற்குத் தர சம்மதித்துள்ளது. இதன் விளைவாக மிக விரைவில் இந்த சிலைகல் தமிழகம் வந்தடைய உள்ளது. நடராஜர் சிலை / ஆஸ்திரேலியா / பொன்மாணிக்கவேல் / கார்த்திகேயன்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.